14 டிசம்பர் 1615
கிழக்கிந்தியக் கம்பெனி நிர்வாகிகளுக்கு இன்றைய தேதியிட்ட அரசு ஆணைப்படி கிரிமினல் குற்றங்களை விசாரித்து தண்டனை வழங்கும் அதிகாரங்கள் தரப்பட்டன. ஆனால் மரண தண்டனை விதிக்கும்படியான குற்றங்களை ஜூரி துணையுடன் விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்று வரையறுத்தது.
14 டிசம்பர் 1799
போரிலும் சமாதானத்திலும் மக்கள் இதயத்திலும் முதலிடம் பெற்ற அமெரிக்காவின் முதல் ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டன் காலமானார். இறப்பதற்கு முன்பு அவர் டாக்டரிடம் கூறிய வார்த்தைகள் "டாக்டர் நான் அவதிப்பட்டுத் தான் இருக்கிறேன். ஆனால் நான் சாவைப் பற்றி அஞ்சவில்லை" என்பதுதான்.
டாக்டர் பிரான்சாஸ் மார்க்கன் என்னும் பெண் டாக்டர் லண்டனில் ஒரு பெண்மணிக்கு கருப்பை அறுவை சிகிச்சை செய்தார். அறுவை சிகிச்சை செய்த முதல் பெண் டாக்டர் இவர்தான்.
பெர்லின் பல்கலைக்கழக பேராசிரியர் மார்க்ஸ் பிளாங்க் புரட்சிகரமான குவாண்டம் தியரியை (Quantum Theory) அறிவித்தார்.
நாவலர் சோமசுந்தர பாரதியார் காலமானார்.
வ.உ.சி.,யால் 'தமிழ்க் கப்பல்' என்று வர்ணிக்கப்பட்டவர் நாவலர் சோமசுந்தர பாரதியார்.
வழக்கறிஞராகப் பணியாற்றி மாதம் ஆயிரம் ரூபாய் சம்பாதித்தவர். வ.உ.சி.யின் அழைப்பை ஏற்று மாதம் 100 ரூபாய் ஊதியம் பெற்று கப்பல் கம்பெனியின் நிர்வாகப் பொறுப்பைக் கவனித்து வந்தார். தேசப்பற்று காரணமாக அவர் அதை செய்தார்.
ராஜாஜி இந்தியை தேசிய மொழி என்ற போது, நாவலரோ 'இந்தி தேசிய மொழியா' என்று கேள்வி எழுப்பி புத்தகம் வெளியிட்டார். சிறிய நூல் என்றாலும் அது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது.
இந்திய விமானப்படை பரம்வீர் சக்ரா விருதை முதன்முதலாகப் பெற்றது இன்று தான்.

Comments
Post a Comment
Your feedback