Skip to main content

Posts

Showing posts from December, 2021

எவ்வளவு கூட்டம் இந்தக் கல்யாணத்தில்!

  மதுரையில் சொக்க நா தருக்கும் மீனாட்சிக்கும் திருமணம் . திருமணத்தை பரஞ்சோதி முனிவர் லைவாக நமக்குக் காட்டுகிறார் . அந்தத் திருமணத்தில் பங்கேற்றுச் சிறப்பிப்பதற்காக வந்த பல நாட்டு மக்களின் பட்டியல் இது. கொங்கு நாடு , சிங்கள நாடு , பல்லவ நாடு , சேர நாடு , கோசல நாடு , பாஞ்சால நாடு , வங்க நாடு , சோனக நாடு , சீன நாடு , சாளுவ நாடு , மாளவ நாடு , காம்போச நாடு , அங்க நாடு , மகத நாடு , ஆரிய நாடு , சோழ நாடு , அவந்தி நாடு , விதர்ப்ப நாடு , கங்க நாடு , கொங்கண நாடு , விராட நாடு , மராட நாடு , கருநட நாடு , குரு நாடு , கலிங்க நாடு , சாவக நாடு , கூவிள நாடு , ஒட்டிய நாடு , கடார நாடு , காந்தார நாடு , குலிங்க நாடு , கேகய நாடு , விதேக நாடு , பூரு மரபு , கொல்ல நாடு , கல்யாண நாடு , தெலுங்கு நாடு , கூர்ச்சர நாடு , மச்ச நாடு , மிலேச்ச நாடு , செஞ்சை நாடு உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த அரசர்களும் மக்களும் சொக்க நா த ர் மீனாட்சி திருமணத்தைப் பார்க்க வருகிறார்கள் . பல வழிகளில் நெருக்கியடித்தபடி அவர்கள் வருவதால் , பூமியே கீழே அழுந்த...

இளம்பிறையே இளம்பிறையே வளர்ந்து விடாதே

  தலைவன் இரவில் தலைவியிடம் வந்து பழகும் சமயம் அவனை விரைந்து மணம் செய்து கொள்ளும்படி தூண்ட எண்ணிய தோழி, “நிலவே, நீ இரவில் நெடுநேரம் வந்து ஒளி தருவது அவர்களின் களவொழுக்கத்திற்கு நன்மை செய்யவில்லை"  என்று கூறுகிறாள்.   கருங்கால் வேங்கை வீயுகு துறுகல் இரும்புலிக் குருளையிற் றோன்றுங் காட்டிடை எல்லி வருநர் களவிற்கு நல்லை யல்லை நெடுவெண் ணிலவே.                          (நெடுவெண்ணிலவினார் ) பாடலின் பொருள்: நீண்ட நேரம் காயும் வெண்ணிலவே! கரிய அடியடைய வேங்கை மரத்தின் மலர்கள் குண்டுக்கல் மேல் உதிர்ந்து கிடப்பது அந்தக் காட்டில் திரியும் பெரிய புலிக்குட்டியைப் போலக் காணப்படும். அந்தக் காட்டினிடையே இரவில் வரும் தலைவனது களவொழுக்கத்திற்கு நன்மை தருவதாக நீ இல்லை. இளம்பிறையே இளம்பிறையே வளர்ந்து விடாதே இருளே இவளின் துணையே தினம் தித்திக்கும் ராத்திரிகள் நிலவே சுடாதே அட தூங்கிய சூரியனே இரவைத் தொடாதே. .. சொற்பொருள்: கருங்கால் -கரிய அடிமரம் வேங்கை -வேங்கை மரம்  வீ - பூ  உகுதல் -உதிர்தல்  துறுகல் =குண்டுக்கல் இ...

ஒற்றை எழுத்துச் சொற்கள்

 தமிழ் எழுத்துகளில் நாற்பத்தி இரண்டு எழுத்துகள் ஓரெழுத்து ஒரு மொழி என்ற வகையைச் சேர்ந்தவை. அதாவது அந்த ஒற்றை எழுத்தே ஒரு சொல்லாகப்  பொருள் தரும். ஆ- பசு ஈ- கொடு ஊ- இறைச்சி ஏ -அம்பு ஐ- அரசன், அழகு, கடவுள் ஓ-உயர்வு, கா - சோலை கூ-கூவு, பூமி, நிலம் கை-கரம் கோ- அரசன் சா- இறப்பு சீ- இகழ்ச்சிக் குறிப்பு, அடக்கம் சே-எருது,ஒலிக்குறிப்பு, சிவப்பு சோ-அரண், உமை, வியப்புச் சொல் தா -கொடு தீ -நெருப்பு து- கெடு தூ -வெண்மை தே -தெய்வம் தை-தை மாதம் நா-நாக்கு நீ- நீங்கள் நே-அன்பு நை-இகழ்ச்சிக் குறிப்பு நொ- துன்பம் நோ- நோவு, நோய் பா- பாட்டு பூ- மலர் பே- நுரை, அழகு பை- அழகு, சாக்கு போ- செல் மா (விலங்கு, பெரியது) மீ -உயரம் மு -மூப்பு மே -மேன்மை மை- அஞ்சனம், கருநிறம் மோ -முகர்தல் யா-மரம் வா-வரச்சொல்லுதல் வீ - பூவின் ஒரு பருவம் வை - வையகம், இங்கு வை எனல் வௌ-கௌவிக்கொள்

11 Tamil அணி இலக்கணம்

  1.வேற்றுமை அணி   தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு – இக்குறட்பாவில் பயின்று வரும் அணியை விளக்குக.   தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு – இக்குறட்பாவில் பயின்று வந்துள்ள அணி வேற்றுமை அணி ஆகும். அணி விளக்கம் இருவேறு பொருள்களுக்கு இடையே   ஒற்றுமையைக் கூறி, பின் அவற்றின் வேற்றுமையைக் கூறுவது வேற்றுமை அணி ஆகும்.   பொருள் விளக்கம் தீயினால் சுட்ட புண்ணும் , நாவினால் சுட்ட வடுவும் சுடுதலால் ஒற்றுமை உடையன.   புண் என்பது ஆறும் ; வடு என்பது ஆறாது என்பது வேற்றுமை.   எனவே இப்பாடலில் வரும் அணி வேற்றுமை அணி ஆகும் .   2.சொற்பொருள் பின்வருநிலையணி   சொற்பொருள் பின்வருநிலையணியை விளக்கி, இக் குறளுக்கு இவ்வணியை ப் பொருத் தி எழுதுக. வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும் தூக்கிச் செயல்.   அணி விளக்கம் ஒரு செய்யுளில் வந்த சொல் மீண்டும் , மீண்டும்   ஒரே பொருளில் வருவது சொ...