நவம்பர் 30: 1606 முதல் ஆங்கில நகைச்சுவை நாடகாசிரியரும் நாவலாசிரியருமான ஜான் லிலி லண்டனில் காலமானார் . ‘ யூப்பூயஸ் ’ ( Euphuos ) என்னும் நாவலை எழுதியவர் . இவரது நடையே யூப்பூயிஸம் என்ற சொல் ஆங்கில அகராதியில் இடம் பெறக் காரணமாயிற்று . நவம்பர் 30: 1825 ‘ புரோமைன் ’ என்னும் தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது . நவம்பர் 30: 1858 புகழ் பெற்ற இந்திய விஞ்ஞானி ஜெகதீஷ் சந்திர போஸ் பிறந்த நாள் . மனிதர்கள் போலவே தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பதை முதலில் கண்டுபிடித்து நிரூபித்தவர் அவர் . உணவை விரும்பி உண்பவர்கள் அசைவத்தை வெறுப்பதற்கு கூறும் முக்கிய காரணம் உயிருள்ள விலங்குகளைக் கொன்று அவற்றை புசிப்பது பாவம் என்பதுதான். அந்தக்கூற்றுக்குப் பின்னனியில் இலைமறைக் காயாக இருக்கும் ஒரு நம்பிக்கை தாவரங்களுக்கு உயிர் இல்லை என்பதாகும் அப்படித்தான் உலகம் நம்பியிருந்தது பல்லாண்டுகளாக. 19 நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒரு விஞ்ஞானி அந்த நம்பிக்கையை பொய்யாக்கி அனைத்துவகை தாவரங்களுக்கும் உயிர் இருக்கிறது என்பதை நிரூபித்துக்காட்டி உலகின் புருவங்களை உய...