செப்டம்பர் 7, 1522:
உலகை வலம் வர விக்டோரியா என்னும் கப்பலில் புறப்பட்ட கேப்டன் ஜான் டி என் கனவும் மற்ற 17 ஊழியர்களும் இன்று ஸ்பெயினில் சான் லூகார் டி பாரமெடா என்னும் இடத்தில் கரையிறங்கினர். கடல் வழியாக உலகை வலம் வந்த முதல் குழு இது.
செப்டம்பர் 7, 1867:
தமிழக நாடகாசிரியரும் நாடக நடிகருமான சங்கரதாஸ் சுவாமிகள் பிறந்த தினம்.
செப்டம்பர் 7, 1882:
செப்டம்பர் 7, 1888:
குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தைக்காக நியூயார்க் நகர மருத்துவமனையில் முதன் முதலில் இன்குபேட்டர் பயன்படுத்தப்பட்டது.
செப்டம்பர் 7, 1925:
திரைப்பட நடிகை, இயக்குநர், இசையமைப்பாளர், பாடகி, தயாரிப்பாளர், எழுத்தாளர் , பாடலாசிரியர் என பன்முகத் திறமை வாய்ந்த நடிகை பி.பானுமதி பிறந்த தினம்.
செப்டம்பர் 7, 1988:
பரதநாட்டியக் கலைஞர், கர்நாடக இசைப் பாடகி எனப் பல திறமைகளைக் கொண்டிருந்த தமிழ்த் திரைப்பட நடிகை வசுந்தரா தேவி காலமானார். இவர் நடிகை வைஜெயந்தி மாலாவின் தாயார்.



Comments
Post a Comment
Your feedback