செப்டம்பர் 6, 1716:
உலகின் முதல் கலங்கரை விளக்கம் வட அமெரிக்காவில் அமைக்கப்பட்டது.
செப்டம்பர் 6, 1799:
பாஞ்சாலங்குறிச்சி போர்-
கட்டபொம்மன் படையை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறிய ஆங்கிலப் படைக்கு ஆதரவாக பாளையங்கோட்டையிலிருந்து புதிய படைகள் வரவே ஆங்கிலப் படைகள் வெகு முனைப்பாகத் தாக்கத் தொடங்கினர்.
கோட்டையில் இருந்து வெளியேறி சிலர் கடலாடி நோக்கிச் சென்றனர். கட்டபொம்மனின் வக்கீல் சிவசுப்பிரமணிய பிள்ளை கைது செய்யப்பட்டார்.
செப்டம்பர் 6, 1880:
இங்கிலாந்தில் ஓவல் மைதானத்தில் ஆஸ்திரேலியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையே முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி தொடங்கியது.
செப்டம்பர் 6, 1916:
உலகின் முதல் சூப்பர் மார்க்கெட் அமெரிக்காவில் டென்னிசியில் தொடங்கப்பட்டது.
செப்டம்பர் 6, 1930:
தமிழ்ப் பேராசிரியரும் எழுத்தாளருமான சாலை இளந்திரையன் பிறந்த நாள்.
செப்டம்பர் 6, 1951:
தினமலர் நாளிதழ் இன்று தான் ஆரம்பிக்கப்பட்டது.


Comments
Post a Comment
Your feedback