செப்டம்பர் 5, 1799:
தமிழக வரலாற்றில் மறக்க முடியாத பாஞ்சாலங்குறிச்சி போர் நடந்த நாள். எதிர்பாராமல் தாக்கி கோட்டையை கணப்பொழுதில் பிடித்து விடலாம் என்ற எண்ணத்தில் லெப்டினெண்ட் டல்லாஸ் தலைமையில் வந்த பீரங்கிப் படையின் முதல் குண்டு பாஞ்சாலங்குறிச்சி கோட்டையில் விழுந்தது. முதல் நாள் போர் கம்பெனியாருக்கு பெருந்தோல்வியாக முடிந்தது. இன்றைய போரில் கம்பெனியார் தரப்பில் காலன் டக்ளஸ், காலின்ஸ் உட்பட பல படைத் தலைவர்கள் உயிரிழந்தனர். பாஞ்சாலங்குறிச்சி தரப்பில் பாதர் வெள்ளை என்னும் வீரன் இறந்தான். கந்தன் பகடை சுட்டு வீழ்த்தப்பட்டான். வீரமல்லுவும் சுந்தரலிங்கமும் வெள்ளை சிப்பாய்கள் பலரைக் கொன்றுவிட்டு தந்திரமாக தப்பி வந்ததற்காக கட்டபொம்மனிடம் ஏராளமான சன்மானங்கள் பெற்றனர்.
சென்னை பல்கலைக்கழகம் துவக்கப்பட்டது இன்று தான்.
செப்டம்பர்5, 1872:
சுதந்தரப் போராட்டத் தியாகியும் கப்பலோட்டிய தமிழன் என்று புகழ்பெற்றவருமாகிய தமிழறிஞர் வ.உ.சிதம்பரம் பிள்ளை பிறந்த நாள்.
செப்டம்பர்5,1888:
நம் நாட்டின் முதல் குடியரசுத் துணைத் தலைவரும் இரண்டாவது குடியரசுத் தலைவருமான டாக்டர்.இராதாகிருஷ்ணன் பிறந்த நாள்.
ஆசிரியர்கள் தினம்
செப்டம்பர்5,1902:
தமிழறிஞர் ஒளவை சு. துரைசாமி பிள்ளை பிறந்த நாள்.





Comments
Post a Comment
Your feedback