செப்டம்பர் 18, 1889
பரலி சு. நெல்லையப்பர் பிறந்த நாள்.
மகாகவி பாரதியாருக்கு உயிர் நண்பராகவும் வ.உ.சிதம்பரம் பிள்ளைக்குத் தொண்டராகவும் விளங்கிய நெல்லையப்பர் விடுதலைப் போராட்டத்தில் பங்குகொண்டவர். சிறைத்தண்டனையை அனுபவித்தவர்.
பாரதியாரின் கவிதைகளை பதிப்பித்து மக்களிடம் கொண்டு சேர்த்ததில் நெல்லையப்பரின் பங்கு மிக முக்கியமானது.
கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கை ஆசிரியர், பதிப்பாளர் என வாழ்நாள் முழுதும் உழைத்த அவர் மார்ச் 28, 1971 இயற்கை எய்தினார்.
செப்டம்பர் 18, 1921:
சித்தரஞ்சன் தாஸ் காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
செப்டம்பர் 18, 1925
காரைக்குடி அழகப்பா கல்லூரி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றிய தமிழறிஞர் இரா. சாரங்கபாணி பிறந்த தினம்.
கா. சுப்பிரமணிய பிள்ளை, தெ. பொ. மீனாட்சிசுந்தரம் பிள்ளை, அ.சிதம்பரநாதன் செட்டியார், மு.அருணாசலம் பிள்ளை, க.வெள்ளைவாரணனார், ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை, வ. சுப. மாணிக்கம் ஆகியோரிடம் மாணவராக இருந்து நேரடியாகக் கற்கும் வாய்ப்பினைப் பெற்ற இவர் பல நூல்களை எழுதியுள்ளார்.
ஆகஸ்ட் 23, 2010 இவர் மறைந்த நாள்.
செப்டம்பர் 18,1928:
மிக்கி மவுசை அறிமுகப்படுத்திய வால்ட் டிஸ்னியின் ஸ்டீம் போர்ட் வில்லி என்னும் கார்ட்டூன் பேசும் படம் நியூயார்க்கில் திரையிடப்பட்டது.


Comments
Post a Comment
Your feedback