செப்டம்பர் 26, 1816:
இன்று பாண்டிச்சேரி பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தது.
செப்டம்பர் 26,1842:
தானே தன்னை அடக்கம் செய்து கொண்ட வினோதம்
மெக்ஸிகோ தளபதி அன்டோனியோ தி சாண்டா அண்ணா 1832 ஆம் ஆண்டு பிரெஞ்சு படையுடன் போரிடும்போது காலில் பலத்த காயம் படவே காலை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டியதாயிற்று. அகற்றப்பட்ட அந்தக் காலை அவர் தன் வீட்டில் நான்கு ஆண்டுகள் பதப்படுத்தி வைத்திருந்தார். அதன் பின் அவர் மெக்ஸிகோவின் ஜனாதிபதியாக ஆகிவிட்டார். அவரது ஆதரவாளர்கள் அந்தக் காலை பாண்டு வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச் சென்று செயின்ட் பாவ்லா தேவாலய வளாகத்தில் இன்று அடக்கம் செய்தனர்.
செப்டம்பர் 26, 1913:
திருக்குறள் வீ.முனுசாமி பிறந்த நாள்.
செப்டம்பர் 26, 1919:
இந்திய ரோட்டரி கிளப்பின் முதல் கூட்டம் கல்கத்தாவில் நடந்தது.
செப்டம்பர் 26,1942:
CSIR தொடங்கப்பட்டது.
செப்டம்பர் 26, 1954:
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை மறைந்தார்.
"மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா"
இது காற்றில் உலவும் கவிமணி குரல்.
செப்டம்பர் 26,1966:
முன்னாள் திருவாங்கூர் சமஸ்தான திவானும் மேட்டூர் பைக்காரா ஆணை காட்டும் திட்டத்தை நிறைவேற்றியவருமான சி..பி. ராமசாமி ஐயர் (CPR) லண்டனில் காலமானார்.
செப்டம்பர் 26, 1975:
சென்னையிலும் கல்கத்தாவிலும் தொலைக்காட்சி நிலையம் தொடங்கப்பட்டது.

Comments
Post a Comment
Your feedback