செப்டம்பர் 23, 1803:
இரண்டாவது மராத்தா போர் மேஜர் ஜெனரல் வெல்லெஸ்லி தலைமையில் வந்த பிரிட்டிஷ் படைக்கும் இந்தியா, ராகோஜி பான்ஸிலே தலைமையில் வந்த மராட்டியப் படைகளுக்கும் அஸாய் என்னுமிடத்தில் கடும்போர் நிகழ்ந்தது. மராட்டியப்படை எண்ணிக்கையில் ஏழு மடங்கு பெரியது. எனினும் பிரிட்டிஷ் படையின் போர் உத்தி காரணமாக மராத்தா படை படுதோல்வி அடைந்தது.
பிரிட்டனைச் சேர்ந்த ஜோஸப் பிராமா என்பவர் மையூற்றும் பேனாவைத் தயாரிப்பதற்கான காப்புரிமை பெற்றார்.
சூரியனிலிருந்து எட்டாவது கோளான நெப்டியூன் கண்டு பிடிக்கப்பட்ட நாள்.
சூரியனை யுரேனஸ் ஒழுங்கற்ற முறையில் சுற்றி வருவதைக் கண்டு பிரிட்டிஷ் வானியலார் ஜான்.சி.ஆடம்ஸ் இந்த சீரற்ற இயக்கத்துக்கு வேறொரு கோளே காரணம் என்று 1845 ஆம் ஆண்டு கூறினார்.
இவரது கணக்கீட்டைக் கொண்டு பிரிட்டிஷ் வானியலார் ஜேம்ஸ் சால்லிஸ் 1846 ஆம் ஆண்டு இக்கோளை இருமுறை பார்த்தார். ஆனால் இவர் இதை ஒரு விண்மீன் எனத் தவறாகக் கருதிவிட்டார்.
இதே சமயத்தில் பிரெஞ்ச் வானியலார் ஆர்பெயின் ஜூன் ஜோஸப் லெவரியர் தனியாக இக்கோளின் இருப்பிடத்தைக் கணக்கிட்டு அப்பகுதியில் தேடும்படி ஜோன் எச்.கேல்லி (ஜெர்மனி) என்பவரைக் கேட்டுக் கொண்டார்.
உடனே கேல்லியும் எல்.டி.அரெஸ்ட் என்பவரும் இவர் குறிப்பிட்ட பகுதியில் தேடத் தொடங்கிய முதல் நாளே அதாவது இன்றே இக்கோள் கண்டுபிடிக்கப்பட்டது.
செப்டம்பர் 23,1848:
அமெரிக்காவின் ஜான் நார்ட்டிஸ் என்பவரால் வர்த்தக ரீதியாக முதன்முதலாக சூயிங்கம் தயாரிக்கப்பட்டது.
யுரேனஸ் கோளின் ஒழுங்கற்ற வட்ட இயக்கத்தைக் கொண்டு வேறொரு கோள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருக்க வேண்டுமென்று கணித்து, நெப்டியூன் கோள் கண்டுபிடிக்கக் காரணமாக இருந்த அர்பெயின் ஜீன். ஜோசப், பாரிஸ் நகரில் காலமானார்.
பிரிட்டிஷ் விமானம் ஒன்று ஜெர்மனி நீர்மூழ்கிக் கப்பலை குண்டு வீசித் தாக்கி மூழ்கடித்தது. விமானத் தாக்குதலில் மூழ்கிய முதல் நீர்மூழ்கிக் கப்பல் இது.
செப்டம்பர் 23, 1923
சிறுகதை, கட்டுரை, புதினங்கள், நாடகங்கள், மேடை நாடகங்கள், கவிதைகள், கீர்த்தனைகள், மொழிபெயர்ப்புகள் என்று பல துறைகளில் புகழ் பெற்று விளங்கிய எழுத்தாளர் கு. அழகிரிசாமி பிறந்த தினம்.
மனித உளப்பகுப்பாய்வியலை உருவாக்கிய சிக்மண்ட் ப்ராய்டு இங்கிலாந்தில் மறைந்தார்.
செப்டம்பர் 23 , 1951:
தமிழ்த் திரைப்பட உலகில் நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என்று பல துறைகளிலும் புகழ்பெற்று விளங்கிய பி. யு. சின்னப்பா மறைந்த தினம்.
செப்டம்பர் 23 ,1973::
நோபல் பரிசு பெற்ற சிலி நாட்டுக் கவிஞர் பாப்லோ நெருடா மறைந்த தினம்.

Comments
Post a Comment
Your feedback