செப்டம்பர் 2,1752:
முந்தைய ஜூலியன் காலண்டரில் இருந்து இன்றைய கிரிகோரியன் காலண்டர் முறையை அமெரிக்காவும் பிரிட்டனும் பின்பற்ற ஆரம்பித்த நாள். இந்த நாளை நீண்ட நெடும் இரவு என்று குறிப்பிடுவார்கள். இரண்டாம் தேதி இரவு தூங்கச் சென்றவர்கள் மறுநாள் காலை விழிக்கும்போது தேதி 14. ஒரு நாள் இரவில் 12 நாள்கள் ஓடி ஒளிந்து கொண்டன. 1582 ஆம் ஆண்டு கிரிகோரி செய்த இந்த சீர்திருத்தத்தை மற்ற ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, போலந்து, அங்கேரி, ஸ்வீடன், டென்மார்க், நெதர்லாந்து ஆகியவை உடனடியாக பின்பற்ற ஆரம்பித்தன. அமெரிக்காவும் பிரிட்டனும் இன்று முதல் பின்பற்ற ஆரம்பித்தன. ரஷ்யா 1917 ஆம் ஆண்டு அக்டோபர் புரட்சிக்குப் பின் தான் காலண்டர் சீர்திருத்தம் செய்தது.
செப்டம்பர் 2, 1793:
அமெரிக்காவின் முதல் நாவல் என்று கருதப்படும் அனுதாபத்தின் வலிமை அல்லது இயற்கையின் வெற்றி என்னும் நூலை எழுதிய வில்லியம் ஹில் பிரவுன் காலமானார்.
செப்டம்பர் 2,1865:
வெக்டர் அல்ஜிப்ராவை கண்டுபிடித்தவர்களில் ஒருவரான சர் வில்லியம் ரோகன் ஹோமில்டன் காலமானார்.
செப்டம்பர் 2,1946:
இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த நிலையில் ஆட்சியை இந்தியர் கைகளில் ஒப்படைக்க பிரிட்டிஷ் அரசாங்கம் முன் வந்தது. இதன்படி இன்று திங்கட்கிழமை ஜவஹர்லால் நேருவின் தலைமையில் இடைக்கால அமைச்சரவை அமைக்கப்பட்டது. அகில இந்திய வானொலியில் முதன் முதலில் நேருவின் சொற்பொழிவு ஒலிபரப்பப்பட்டதும் இன்று தான். இந்த நாளை முஸ்லிம் லீக் துக்கதினமாக அறிவித்தது.
செப்டம்பர் 2,1970:
கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டபத்தை குடியரசுத் தலைவர் வி.வி.கிரி திறந்து வைத்தார்.
செப்டம்பர் 2, 2009:
ஆந்திர முதலமைச்சர் Y.S. ராஜசேகர ரெட்டி பயணித்த ஹெலிகாப்டர் மலையில் மோதி விபதிக்குள்ளானது. அதில் பயணித்த முதலமைச்சர் உட்பட ஐந்து பேரும் உயிரிழந்தனர்.
செப்டம்பர் 2, 2023:
இந்திய ஆய்வு விண்கலம் ஆதித்தியா எல் 1 இன்று வெற்றிகரமாக சூரியனை நோக்கி ஏவப்பட்டது.




Comments
Post a Comment
Your feedback