செப்டம்பர் 15,1784:
இத்தாலியைச் சேர்ந்த ஆரோநாட் லுனாட்டி என்பவர் முதன்முதலாக பலூனில் பறந்து வந்து இங்கிலாந்தில் இறங்கினார்.
செப்டம்பர் 15, 1857:
முதல் லெட்டர் ஹெட் ஷீட் வெளியிடப்பட்டது.
செப்டம்பர் 15:1860:
உலகப் புகழ் பெற்ற இந்தியப் பொறியாளர் விசுவேஸ்வரய்யா. பிறந்த நாள். இவர் பிறந்த இந்த நாள் தான் இந்தியாவில் பொறியாளர் தினம் என்று கொண்டாடப்படுகிறது.
செப்டம்பர் 15:1891:
'ஜெய் ஹிந்த்' எனும் முழக்கத்தை முதலில் முழங்கிய செண்பகராமன் பிள்ளை பிறந்த நாள்.
ஹிட்லருடன் நட்புப் பாராட்டியவர். ஒரு முறை ஹிட்லர் "இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தால் இந்தியர்களாகிய உங்களால் நாட்டை ஆளமுடியுமா?" என்று கேட்டார். அவ்வாறு கேட்டது தவறு என்று ஹிட்லரையே போது வெளியில் மன்னிப்புக் கேட்கவைத்தவர் இவர்.
நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பே 1934 ஆம் ஆண்டு மே 26 ஆம் நாள் மறைந்துவிட்டார்.
" நான் இறந்த பிறகு என் சாம்பலை இந்தியாவிற்கு எடுத்துச் செல்ல வேண்டும். இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, சாம்பலின் ஒரு பகுதியை என் தாயாரின் சாம்பலைக் கரைத்த திருவனந்தபுரத்திலுள்ள கரமனை ஆற்றில் கரைக்க வேண்டும். மீதியை நாஞ்சில் நாட்டு வயல்களில் தூவ வேண்டும்" என்று தம் விருப்பத்தை வெளியிட்டார்.
அவர் மறைந்து முப்பத்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த அவரது அஸ்தி சாம்பல் 1966 ஆம் ஆண்டு சுதந்திர இந்தியாவில் கரமனை ஆற்றில் கரைக்கப்பட்டு நாஞ்சில் வயல்களில் தூவப்பட்டது.
தமிழக முன்னாள் முதலமைச்சர் சி.என். அண்ணாத்துரை பிறந்த நாள்.
செப்டம்பர் 15,1928:
அலெக்ஸாண்டர் பிளமிங் பென்சிலினைக் கண்டுபிடித்தார்.
செப்டம்பர் 15,1928:
லண்டனில் நடந்த மாடல் இன்ஜினியரிங் கண்காட்சியில் கேப்டன் ரிக்கா்ட்ஸ், ரெஃபல் என்பவர்களால் உருவாக்கப்பட்ட ரோபோ என்னும் எந்திர மனிதன் காட்சிக்கு வைக்கப்பட்டது.
செப்டம்பர் 15,1948:
சுதந்திர இந்தியாவின் முதல் கொடி கப்பல் ஐ.என்.எஸ் டில்லி பம்பாய் துறைமுகம் வந்து சேர்ந்தது.
செப்டம்பர் 15,1949:
இந்தி தேசிய மொழியாக அங்கீகரிக்கப்பட்டது.
செப்டம்பர் 15,1950:
மறைமலை அடிகள் மறைந்த தினம்.
செப்டம்பர் 15, 1981:
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்ட நாள்.




Comments
Post a Comment
Your feedback