செப்டம்பர் 13,1814:
அமெரிக்க தேசிய கீதம் பிறந்தநாள்.
பிரிட்டிஷ் போர்க்கப்பலில் சிறை வைக்கப்பட்டிருந்த தனது நண்பரை அமெரிக்க வழக்கறிஞர் பிரான்சிஸ் ஸ்காட் விடுவிக்க முயற்சி செய்து கொண்டிருந்தார். இவரையும் ஒரு பிரிட்டிஷ் கப்பலில் பிடித்து சிறை வைத்து விட்டனர். பால் தி மோர் அருகில் கோட்டையை இரவு முழுவதும் பிரிட்டிஷ் படைகள் தாக்குவதை கப்பல் தளத்திலிருந்து இவர் பார்த்துக் கொண்டிருந்தார். கோட்டைக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை. கோட்டையிலே அமெரிக்கக் கொடி கம்பீரமாக பறந்து கொண்டிருந்தது. அந்த மகிழ்ச்சியிலும் கிளர்ச்சியிலும் பழைய கடித உரையின் மேல் இவர் எழுதிய 'மினுமினுக்கும் கொடி' என்ற பாடல் தான் பின்னர் (3.3.1931) அமெரிக்க காங்கிரசினால் தேசிய கீதமாக அறிவிக்கப்பட்டது.
செப்டம்பர் 13,1901:
மைசூர் திவானாக இருந்த சேஷாத்ரி ஐயர் பெங்களூரில் காலமானார். நவ இந்தியாவின் நிர்மாணச் சிற்பிகளுள் ஒருவர் இவர்.
செப்டம்பர் 13, 1940:
பிரான்சில் பெரி கார்டில் மாண்டினாக் என்னும் ஊரின் அருகே செப்டம்பர் 12ஆம் தேதி நான்கு சிறுவர்கள் சென்று கொண்டிருந்தனர். முன்னாள் சென்று கொண்டிருந்த அவர்களது நாய் திடீரென்று காணாமல் போய்விட்டது. அதைத் தேடி ஒரு பள்ளத்தில் இறங்கி சென்ற போது ஒரு குகையையும் அவர்களது நாயையும் அங்கே கண்டனர். குகை மிக இருட்டாக இருந்ததால் எதுவும் கண்ணிற்கு தெரியவில்லை. எனவே மறுநாளான இன்று அதாவது செப்டம்பர் 13 கையில் விளக்குடன் அந்த சிறுவர்கள் குகையில் நுழைந்து பார்த்தனர். குகை சுவரில் கூரை வரைக்கும் குதிரைகள், எருதுகள், மான் கூட்டங்கள் சிறிய பசுக்கள் ஆகியவற்றின் ஓவியங்கள் கருப்பு சிவப்பு வண்ணங்களில் தீட்டப்பட்டிருந்தன. அப்போதுதான் இந்த ஓவியங்கள் வெளி உலகத்திற்கு தெரிந்தன. லாஸ் காக்ஸ் மலைக் வகைகள் என்று குறிப்பிடப்படும் இப்பகுதியில் உள்ள குகை ஓவியங்கள் 25 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை.


Comments
Post a Comment
Your feedback