ஜனவரி 30 வள்ளலார் நினைவு நாள்.
இராமலிங்க வள்ளலார் முருகப் பெருமான் மீது அளவில்லாத பக்தி கொண்டவர்.
சென்னை பாரிமுனை (பாரிஸ் கார்னர்) கந்தகோட்டம் முருகன் கோவில் தான் அவர் பெரும்பகுதி நேரம் இருந்த கோவில் வளாகம். அந்த கந்தகோட்டம் முருகன் மீது வள்ளலார் திருப்பதிகம் பாடியுள்ளார்.
திருஞானசம்பந்தரை வழிபடு குருவாகக் கொண்டவர்.
திருவாசகத்தில் திளைத்தவர்.
எந்த உயிருக்கும் துன்பம் தரக் கூடாது என்ற (ஜீவகாருண்யம்) கொள்கை கொண்டவர்.
பசிப்பிணி போக்குவது பெரும் புண்ணியம் என்று போதித்தவர்.
சைவ சமயத்தைச் சார்ந்த போதும் திருமாலைப் போற்றியவர்.
இறைவனை ஜோதி வடிவமாகத் தரிசித்தவர்.
ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்ற நான்கு பாவிலும் பாடல் இயற்றும் திறம் பெற்றிருந்தவர்.
192 சீர்களில் இவர் பாடிய ஆசிரிய விருத்தம் இன்றும் தமிழ் இலக்கியத்துள் மிகப்பெரிய ஆசிரிய விருத்தம் என்ற பெருமையுடையது.
அடி எண்ணிகையில் பெரிய ஆசிரியப்பாவும் இவர் பாடியது தான். 1596 அடிகள்.
தொழுவூர் வேலாயுத முதலியார் இவருக்கு திருஅருட் பிரகாச வள்ளலார் எனப் பெயரிட்டதோடு இவர் பாடல்களைத் தொகுத்து 'திருவருட்பா' என்ற பெயரில் பதிப்பித்தவர்.
அருட்பா என்ற இவரது பாடல்களை “மருட்பா” என்று கூறினார் ஆறுமுக நாவலர்.
வடலூரில் 1865 இல் சன்மார்க்க சங்கம் தொடங்கி, 1872 இல் அதை சத்திய ஞானசபை ஆக்கினார்.
பல நூல்கள், கட்டுரைகள் என வள்ளலாரின் தமிழ்ப் பணி, அவரது ஆன்மீகப் பணி போலவே , அறப்பணி போலவே அவரது புகழை என்றும் பேசும்.
1823 இல் அக்டோபர் 5 ஆம் நாள் பிறந்த வள்ளலார் 1874ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் நாள் நடு இரவில் இயற்கை எய்தினார். 51 ஆண்டுகள் இந்த மண்ணில் வாழ்ந்த மாமனிதர் அவர்.
என்றும் வாழும் அவரது வாக்குகள்:
அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை
பசித்திரு, தனித்திரு, விழித்திரு
அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும்.
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்.

Comments
Post a Comment
Your feedback