குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு என்பார்கள்.
எவ்வளவு பெருமை உடையவராக இருந்தாலும் குடிப்பழக்கம் உடையவர் பிறரது கேலிக்கும் அவமானத்துக்கும் உள்ளாவது இயல்பு.
குடித்த பின்பு நிலை தடுமாற்றம் ஏற்பட்டு மதிமயங்கும் நிலையே இந்த இழிநிலையை உருவாக்குகிறது.
தேறு கள் நறவு உண்டார் மயக்கம்போல
என்று குடிகாரர்களின் மயக்கத்தை கலித்தொகை விவரிக்கும்.
குடிப்பழக்கத்தால் வருகின்ற இந்த மயக்கத்தையும் அது தரும் கெடுதலையும் அழிவினையும் பளிச்செனப் புரிய வைக்கும் வரிகள் இவை.
மது மயக்கம்- அது
மதி மயக்கம்- ஒரு
வம்சத்தை அழிப்பது
மதுப்பழக்கம்
ராத்திரி முழுவதும் விழிக்க வைக்கும்
அவசரமான வேலையையும்- அட ஆகட்டும் போவென விலக்கி வைக்கும்
குடித்தபின் சொல்லும் வார்த்தைகளில்- வரும் கோபங்களை மனஸ்தாபங்களை
விடிந்ததும் யாரும் எடுத்துரைத்தால் அது விவஸ்தை இல்லாமல் மறந்திருக்கும்.
(கண்ணதாசன்)
Comments
Post a Comment
Your feedback