பொருள் தேடித் போனவன் இன்னும் வரவில்லை. பாவம் எங்கே கஷ்டப்படுகிறானோ!
பொருள் கிடைத்தவுடன் வீடு வர வேண்டும்.
ஆனால் வீட்டிலோ அவனுக்காக உருகிக்கொண்டிருக்கிறாள் அவன் மனைவி.
அந்த நேரத்தில் அந்தப் பெண் சொல்வது இது .
அவன் வருவான் வருவான் என்று அவன் வரவைப் பார்த்துக்கொண்டே வீட்டுக்கும் வெளியிலும் நடந்து கொண்டிருக்கிறேன்.
நடந்து நடந்து என் கால்கள் நடக்கும் வலிமை இழந்து தள்ளாடுகின்றன.
அவன் வருவானா வருவானா என்று பார்த்துப் பார்த்து பாவம் என்
கண்கள் பார்க்கும் வலிமை இழந்து பூத்துப்போய்விட்டன.
அவரவர் வீட்டுக்குப் போய்க்கொண்டிருப்பவர்கள் ஆயிரக்கணக்கில் அந்த வானத்து
விண்மீன்கள் போல இருக்க, என்னவன் மட்டும் இன்னும் வரவில்லையே.
காலே பரி தப்பினவே; கண்ணே
நோக்கி நோக்கி வாள் இழந்தனவே;
அகல் இரு விசும்பின் மீனினும்
பலரே மன்ற, இவ் உலகத்துப் பிறரே.
(வெள்ளிவீதியார் )
Comments
Post a Comment
Your feedback