புகழுவமை உவமைகளுள் ஒருவகை.
உவமையைப் புகழ்ந்து உவமிப்பது புகழுவமை எனப்படும்.
அவள் அழகு தான். அந்த அழகு அவள் சொந்த அழகல்லவாம்.
அவள் கண்கள் மானிடமும் அவள் சாயல் மயிலிடமும் இதழ் தேனிடமும் அவள்
அழகோ சிலையிடமும் இரவல் பெற்றவையாம்.
மருளும் கண்களால் மான்விழி அழகு. இப்படிஅவளின் அழகைக் கூற
ஒவ்வொன்றாகப் பார்த்துப் பார்த்து உவமையை ஏற்கும் பொருளைவிட உவமை சிறப்பாக
இருக்குமாறு புகழ்ந்துரைப்பதால் இது புகழுவமை.
மானல்லவோ கண்கள் தந்தது
மயிலல்லவோ சாயல் தந்தது
தேனல்லவோ இதழைத் தந்தது
சிலையல்லவோ அழகைத் தந்தது.
(கண்ணதாசன்)
அங்கே ஒரு ஆண் ஒரு பெண்ணைப் புகழ்ந்துரைப்பதைப் போல இங்கே ஒரு பெண் அவன் அழகைப் புகழ்ந்துரைக்கிறாள். எப்படிப் புகழ்கிறாள்?
அவன் நல்ல கருப்பு நிறம்.
கருப்பு நிறம் வேறு; நல்ல கருப்பு நிறம் வேறு.
அந்தச் சிறப்புக்கும் ஒரு புகழுவமை.
நாவல் பழத்திலே-நல்
காயாம் பூவிலே
காசுக் கருப்பிலே
கறுங்கருப்பு எங்க மச்சான்.
(கண்ணதாசன்)
சும்மா கருப்பல்ல; நாவல் பழம் போலக் கருப்பாம்.
எல்லாப் புகழுக்கும் முத்தாய்ப்பாக வரும் புகழ்ச்சி ‘கறுங்கருப்பு’.
எது சிறப்பானதோ அதைத் தானே சொல்லமுடியும்!
அது தானே புகழுவமை.
Comments
Post a Comment
Your feedback