என் அன்புத் தோழியே!
பனிக்காலத்தில் பசு மாடு மேயப் போகும்.
சின்னதும் பெரியதுமாக தன் கூட்டத்தோடு போகும். எருதும் அதன் கூடவே போகும்.
மாலை வரை புல் மேய்ந்த பின், தன் மடியில் பால் சுரப்பதை உணரும். உடனே அதற்கு தன் கன்றின் நினைவு வந்தது விடும்.
கன்றுக்குப் பசிக்கும் என மனதில் நினைத்த மாத்திரத்தில் பசு தன் கூட்டத்தை விட்டுவிட்டு கன்றைத் தேடி கட்டுத்தரைக்கு வந்து விடும்.
அந்தப் பசு எங்கே போனாலும் குடும்பத்தை மறப்பதில்லை.
உரிய நேரத்துக்கு வீட்டுக்கு வந்துவிடுகிறது.
ஆனால் என் கணவனைப் பாரேன்.
இன்னும் காசு..., இன்னும் பணம்..., இன்னும் பொருள்... என்று அவற்றின் பின்னாலேயே ஓடிக்கொண்டிருக்கிறது அவன் வாழ்க்கை.
அவனுக்கும் குடும்பம், வீடு இருக்கிறது.
அவன் ஏன் தோழி பசு மாதிரி பொறுப்பாக இருப்பதில்லை.
அப்படிப் பொறுப்பாக இருந்தால் எப்படி இருக்கும்?
ஆகா, அது அல்லவா வாழ்க்கை!.
நோற்றோர் மன்ற தோழி! தண்ணெனத்
தூற்றும் துவலைப் பனிக் கடுந் திங்கள்
புலம் பயிர் அருந்த அண்ணல் ஏற்றொடு
நிலம் தூங்கு அணல வீங்கு முலை செருத்தல்
பால் வார்பு, குழவி உள்ளி, நிரை இறந்து,
ஊர்வயின் பெயரும் புன்கண் மாலை,
அரும் பெறல் பொருட் பிணிப் போகிப்
பிரிந்து உறை காதலர் வர, காண்போரே.
(குறுந்தொகை)
Comments
Post a Comment
Your feedback