காசு பணம் வீடு சொத்து என செல்வம் படைத்தவன் தன்னைப் பெருமையாக உணரும் போது காலை ஆட்டிக்கொண்டு இருப்பான்.
அப்படிப் பெருமையோடு வாழும்போது அவனைச் சுற்றி வரும் சொந்த பந்தம் வானத்தில் தெரியும் மீன்களை விடவும் கூட இருக்கும்.
அவனுக்கு ஒரு துன்பம் வந்து வசதி வாய்ப்புப் போய்விட்டால் எத்தனை பேர் அவனோடு தொடர்பில் இருப்பார்கள்?
"எத்தனை விண்மீன்கள் இருந்த வானம் இது. அத்தனை மீன்களும் எங்கே போய்விட்டன இப்போது? " என்று அப்போது தான் அவன் யோசிப்பான்.
காலை ஆட்டும் போதே கவனம் வேண்டும்... காலம் இப்படியே இருக்காது என்பதில்.
இப்படிச் சொல்கிறது இந்தப் பாடல்.
காலாடு போழ்தில் கழிகிளைஞர் வானத்து
மேலாடும் மீனின் பலராவர் - ஏலா
இடரொருவர் உற்றக்கால் ஈர்ங்குன்ற நாட
தொடர்புடையேம் என்பார் சிலர்.
(நாலடியார்)
Comments
Post a Comment
Your feedback