சகலகலாவல்லி மாலை- பாடல் 1
ஓசை இன்பத்தை உணர, குமரகுருபரர் எப்படிப் பாடினாரோ அதே போல
சீர்பிரிக்காமல் பாடல்.
வெண்டா மரைக்கன்றி
நின்பதந் தாங்கவென் வெள்ளையுள்ளத்
தண்டா மரைக்குத் தகாதுகொ லோசக மேழுமளித்
துண்டா னுறங்க வொழித்தான்பித் தாகவுண்
டாக்கும்வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே.
பொருள் புரிந்து இன்புற சீர் பிரித்து அப் பாடல்.
வெண் தாமரைக்கு அன்றி நின் பதம்
தாங்க என் வெள்ளை உள்ளத்
தண் தாமரைக்குத் தகாதுகொலோ? சகம் ஏழும்
அளித்து
உண்டான், உறங்க, ஒழித்தான்
பித்து ஆக, உண்டாக்கும் வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே, சகலகலாவல்லியே.
பொருள் விளக்கம்
நின் பதம் தாங்க -உன்
திருவடியை ஏந்த
தகாது கொலோ -தகுதி
இல்லையா?
சகம் ஏழும் அளித்து -ஏழு
உலகையும் காக்கும் (திருமால்)
உண்டான் உறங்க -உண்டு
ஆலிலையில் உறங்க
ஒழித்தான் பித்தாக -சிவனோ பித்தன் போல ஊழிக் கூத்தாட
உண்டாக்கும் வண்ணம் கண்டான் - படைக்கும் கடவுள் (நான்முகன்)
பாடலின் பொருள்:
கலைவாணியே! படைக்கும் கடவுள் பிரம்மனுக்கு கரும்பு போல் இனியவளே! உன் திருவடிகளை வெண்தாமரை தாங்கி நிற்கிறது. இந்த எளியவனின் மனம் என்னும் தாமரை உன் திருவடிகளை ஏந்தத் தகுதியில்லையா?
Comments
Post a Comment
Your feedback