மா, பலா, வாழை என்ற முக்கனிகளை தனித்
தனியே பிழிந்து வடி கட்டி எடுத்துக்
கொள்ளவேண்டும்.
பின் அவற்றை ஒன்றாகக்
கலந்து சிறிதளவு சர்க்கரையையும் கற்கண்டுத் தூளையும் சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும்.
அதனுடன்
நல்ல தேன் சிறிது சேர்த்துக் கலக்க
வேண்டும்.
பின் தேவையான
அளவு பசும் பால் மற்றும் தேங்காய்ப் பால் சேர்த்துக்
கொள்ள வேண்டும்.
அதனுடன் கொஞ்சம் முந்திரி, பாதாம் பருப்புகளை பொடியாகத்
தூவி விட வேண்டும்.
அதன் மேல் நல்ல
நெய் சிறிதளவு விட்டு
இளஞ்சூட்டில் இறக்கி எடுக்க வேண்டும்.
அதைச்
சிறுசிறு துண்டுகளாகச் செய்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதன்
சுவை எப்படி இருக்கிறது?
அந்தச் சுவையை விட மேலான இனிய தெளிந்த அமுதே!
திருவரங்கத்தில் நடனமாடும் பெருமானே!
உன்
திருவடிகளில் என் பாமாலையை அணிகலனாக அணிந்து எனக்கு அருள்புரிய வேண்டும்.
தனித்தனிமுக் கனிபிழிந்து வடித்தொன்றாக் கூட்டிச்
சருக்கரையும் கற்கண்டின் பொடியுமிகக் கலந்தே
தனித்தநறுந் தேன்பெய்து பசும்பாலும் தெங்கின்
தனிப்பாலும் சேர்த்தொருதீம் பருப்பிடியும் விரவி
இனித்தநறு நெய்யளைந்தே இளஞ்சூட்டின் இறக்கி
எடுத்தசுவைக் கட்டியினும் இனித்திடுந்தெள் ளமுதே
அனித்தமறத் திருப்பொதுவில் விளங்குநடத் தரசே !
அடிமலர்க்கென் சொல்லணியாம்
அலங்கலணிந் தருளே
தனித்தனிமுக் கனிபிழிந்து - தனித் தனியே மா, பலா, வாழை என்ற முக் கனியையும் பிழிந்து எடுத்து
வடித்தொன்றாக் கூட்டி -வடி கட்டி, பின் ஒன்றாகக் கலந்து
சருக்கரையும் - கொஞ்சம் சர்க்கரை
கற்கண்டின் பொடியும் -கொஞ்சம் கற்கண்டின் பொடி
மிகக் கலந்தே - நன்றாக கலந்து.
தனித்தநறுந் தேன்பெய்து - சிறந்த நல்ல தேன் கொஞ்சம் கலந்து
பசும்பாலும் - அதோடு கூட கொஞ்சம் பசும் பால்
தெங்கின் தனிப்பாலும் - மற்றும் தேங்காய்ப் பால்
சேர்த்து - சேர்த்து
ஒருதீம் பருப்பிடியும் விரவி - அதோடு கொஞ்சம் முந்திரி, பாதாம் போன்ற பருப்புகளை பொடி செய்து விரவி
இனித்தநறு நெய்யளைந்தே - அது மேல்நல்ல நெய் விட்டு
இளஞ்சூட்டின் இறக்கி எடுத்த - இளஞ்சூட்டில் இறக்கி எடுத்த
சுவைக் கட்டியினும் - அந்தச் சுவையை விட மேலா
இனித்திடுந்தெள்ளமுதே - இனிய தெளிந்த அமுதே!
அனித்தமற(அநித்தம் + அற)- நிலையில்லாதவை விலக
திருப்பொதுவில் விளங்குநடத்தரசே ! -திருவரங்கத்தில் நடனமாடும் பெருமானே!
அடிமலர்க்கென் சொல்லணியாம் -உன்னுடைய திருவடிகளில் என் பாமாலையை
அலங்கலணிந் தருளே - அணிகலனை அணிந்தருளே
Comments
Post a Comment
Your feedback