மணமக்களுக்கு இருக்கக் கூடாத
பத்துக் குணங்களாக தொல்காப்பியம் கூறுவன.
நிம்புரி கொடுமை வியப்பொடு
புறமொழி
வன்சொல் பொச்சாப்பு மடிமையொடு
குடிமை
இன்புறல் ஏழைமை மறப்போடொப்புமை
என்றிவை இன்மை என்மனார் புலவர்.
1.நிம்புரி - தற்பெருமை
கூடாது
2.கொடுமை - தீமை
செய்யும் மனப்பான்மை கூடாது
3.வியப்பு - ஒருவருக்கொருவர்
இணையாகக் கருதாமல் தன்னை வியத்தல் கூடாது
4.புறமொழி - புறம்பேசக்
கூடாது
5.வன்சொல் - தகாத
சொற்கள் பேசக்கூடாது
6.பொச்சாப்பு - ஏனோ
தானோ என தளர்ச்சியோடு இருக்கக் கூடாது
7.குடிமை - தன்
குடும்பத்தை மட்டும் உயர்த்திப் பேசக்கூடாது
8.ஏழைமை - வருவாய்க்கு
ஏற்ற வாழ்க்கை வாழ வேண்டும். வறுமைக்கு
வருந்தக் கூடாது.
9.மறதி - மறதி கூடாது
10.ஒப்புமை - கணவனை
மனைவியோ, மனைவியை கணவனோ பிறரோடு ஒப்பிட்டுப் பேசக் கூடாது.
Comments
Post a Comment
Your feedback