திருமலை நாயக்கர்
மதுரையில் ஓர் அழகிய மாளிகையைக் கட்டியிருந்தார். அதன் சுவர்களில் பேர்போன வித்தகரைக் கொண்டு அருமையான ஓவியங்கள் புனையப்பட்டிருந்தன. அந்த அழகான சித்திர மாளிகை ஓர் ஓவியக்
கண்காட்சிபோல் இருந்தது.
இதைப் பற்றிக்
கேள்விப்பட்ட இளைஞன் ஒருவன், தன்னுடைய மனைவியிடம் அந்த ஓவியங்களைப்
பார்த்து வரலாம் என்று அழைக்கிறான்.
“திருமலை நாயக்கர் சித்திரமாளிகையின் நீண்ட சுவர்களில் பல அழகான ஓவியங்கள் தீட்டப்பட்டிருக்கிறதாம், நாம் போய்ப் பார்த்துவிட்டு வரலாமா?”
“நான்
வரவில்லை.”
“ஏன்? உனக்கு ஓவியங்களைப் பிடிக்காதா?”
“பிடிக்கும், ஆனால் அங்கே ஆண் ஓவியங்கள் இருக்கும், அவற்றை
நான் பார்க்கமாட்டேன்.”
"அங்கே பெண்
ஓவியங்கள் மட்டுமே இருந்தால் பார்த்துவிட்டு வரலாமா?”
“பெண்
ஓவியங்களை நீங்கள் பார்த்து ரசிப்பீர்கள், அதைக் காண
என் மனம் பொறுக்காது.”
பாடல்:
ஓவியர்நீள் சுவர் எழுதும் ஓவியத்தைக் கண்ணுறுவான்
தேவியை யான்
அழைத்திட, ‘ஆண் சித்திரமேல் நான் பாரேன்,
பாவையர்தம்
உருவம் எனில் பார்க்க மனம் பொறேன்’ என்றாள்,
காவி விழி மங்கை
இவள் கற்பு வெற்பின் வன்பு உளதால்
நீதி நூல் உரை (மாயூரம் வேதநாயகம் பிள்ளை)
Comments
Post a Comment
Your feedback