திருமண
வயது அன்றும் இன்றும்
சிலப்பதிகாரக்
காலத்தில் (கி.பி. 2 ஆம்
நூற்றாண்டு) தான் முதன்முதலாக ஆண்,
பெண்ணிற்கான திருமண வயது குறிப்பிடப்படுகிறது. கோவலன் கண்ணகி திருமணத்தின்போது கோவலனுக்கு
வயது 16 என்றும்
கண்ணகிக்கு 12 என்றும்
இளங்கோவடிகள் கூறுகிறார்.
கண்ணகி : மாக வான் நிகர் வண்கை, மாநாய்க்கன் குலக்கொம்பர்
ஈகைவான் கொடி
அன்னாள் ஈராறாண்டு அகவையாள்.
கோவலன் : இருநிதிக் கிழவன் மகன் ஈரெட்டாண்டு அகவையான்
சேக்கிழார்
எழுதிய பெரியபுராணத்தில் திருநாவுக்கரசரின் தமக்கையாரான திலகவதியாருக்கு 12 வயதானதும் திருமண ஏற்பாடு செய்தனர் என்ற குறிப்பு வருகிறது.
காலப்போக்கில்
இடைப்பட்ட காலத்தில் குழந்தைகளுக்குக் கூட திருமணம் செய்து வைக்கும் போக்கு
நிலவியது.
1891-ஆம்
ஆண்டு குழந்தைத் திருமணம் தவறு எனக் கருதப்பட்டு, குழந்தை திருமணத்தைத் தடுக்கச் சட்டம் இயற்றப்பட்டது. பெண்ணுக்கு வயது 12 ஆன பின்பே திருமணம் என்பது சட்டமாக்கப்பட்டது.
1925ல்
பெண்ணின் திருமண வயது 13 என
உயர்த்தப்பட்டது.
1929-ல்
சாரதா சட்டம் மூலம் பெண்ணின் திருமண வயது 14 என
நிர்ணயிக்கப்பட்டது.
1949-ஆம்
ஆண்டு இச்சட்டம் திருத்தப்பட்டு பெண்ணின் திருமண வயது 15 ஆக உயர்த்தப்பட்டது.
1956-ல்
பெண்ணின் திருமண வயது 16 என்றும்
ஆணின் திருமண வயது 19 என்றும்
மாற்றப்பட்டது.
இன்றைய சட்டப்படி பெண் 18 வயதையும் ஆண் 21
வயதையும் பூர்த்தி செய்த பின்பே திருமணம் நடத்த முடியும்.
Comments
Post a Comment
Your feedback