தமிழின் முதல் இலக்கண நூலான தொல்காப்பியம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருமணப் பொருத்தம் பற்றித் தெளிவாகக் கூறியுள்ளது. மணமகன் , மணமகள் இருவருக்கும் பார்க்க வேண்டிய பத்துப் பொருத்தங்கள்.
பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டோடு
உருவு நிறுத்த காம வாயில்
நிறையே அருளே உணர்வொடு திருவென
முறையுறக் கிளந்த ஒப்பினது
வகையே!
1.பிறப்பு
பெருமைக்குரிய குடும்பத்தில் பிறத்தல். தம் தகுதிக்கேற்ற பிறப்பு உடையவர்களுடன் திருமண உறவு கொள்ள வேண்டும்.
2.குடிமை
பிறந்த குடிக்கு கெட்டபெயர்
வராமல் காக்கும் ஒழுக்கம் உடையவர்களா
எனப் பார்க்க வேண்டும்.
3.ஆண்மை
முயற்சியோடு செயல்படும்
ஊக்கமுடையவர்களா எனப் பார்க்க வேண்டும்.
4.ஆண்டு
பெண்ணை விட ஆண் வயதில் கூட
இருக்க வேண்டும்.
5.உருவம்
இருவரின் தோற்றமும் ஒத்திசைவாக
பொருத்தமாக அமைய வேண்டும்.
6.நிறுத்தகாம வாயில்
இன்பத்திலும் அன்பிலும்
பொருத்தமானவர்களாக இருக்க வேண்டும்.
7.நிறைப்பொருத்தம்
குடும்பப் பிரச்சினைகளை
பொது வெளியில் பேசாமல் இருக்கும் நிறைகுணம் உடையவரா எனப் பார்க்க வேண்டும்.
8.அருள்
எல்லா உயிர்களிடத்தும்
அன்பு கொண்டவர்களாக இருக்க வேண்டும்.
9.உணர்வு
எது சரி எது தவறு என்பதை
உணர்ந்து ஊரோடு ஒட்ட ஒழுகும் பண்புள்ளவர்களா எனப் பார்க்க வேண்டும்.
10.திருப்பொருத்தம்
செல்வ நிலையில் சமதகுதி உள்ள குடும்பமா
எனப் பார்க்க வேண்டும்.
Comments
Post a Comment
Your feedback