வயலில் நட்ட பயிர் தண்டு தடித்து இருப்பது பச்சைப்பாம்பு கருவுற்று இருப்பது போலக் காணப்படுகிறது.
கதிர் வெளி வந்ததும் பால் பிடிக்காததால் நற்குடிப் பிறவாத செல்வந்தர் போலத் தலை நிமிர்ந்து நிற்கின்றது.
பால் கட்டி மணி பிடித்ததும் கல்வி அறிவுடையாரைப் போன்று தலை தாழ்ந்து நிற்கின்றது.
சொல்லரும் சூற்பசும்
பாம்பின் தோற்றம்போல்
மெல்லவே கருவிருந்து ஈன்று மேலலார்
செல்வமே போல்தலை நிறுவித் தேர்ந்தநூற்
கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே.
(நாமகள் இலம்பகம்)
தரைய பார்த்து நிக்குது
நல்ல கதிரு
தன் குறைய மறந்து மேலே
பார்க்குது பதரு- அது போல்
அறிவு உள்ளது அடங்கி கிடக்குது
வீட்டிலே
எதுக்கும் ஆகாத சிலது
ஆர்ப்பாட்டம் செய்யுது வெளியிலே
அதாலே மனுசன மனுஷன்
சாப்பிடுராண்டா தம்பிப் பயலே
இது மாறுவதெப்போ
தீருவதெப்போ நம்ம கவலே
(மருதகாசி)
Comments
Post a Comment
Your feedback