எல்லா உலகங்களையும் தானே படைப்பதையும், நிலைத்திருக்குமாறு காப்பதையும், அழிப்பதையும்,
என்றும் முடிவுறாத அளவில்லாத அழகிய விளையாட்டாக உடையவர். அவரே
தலைவர். அப்படிப்பட்ட பரமனையே நாங்கள் சரணடைகிறோம்.
உலகம் யாவையும் தாம் உள ஆக்கலும்,
நிலை பெறுத்தலும், நீக்கலும், நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார் – அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே.
உளஆக்கல் – படைத்தல்
பெறுத்தல் – காப்பாற்றுதல்
அலகு இலா – அளவில்லாத
Comments
Post a Comment
Your feedback