Skip to main content

எனக்கு மிகவும் பிடித்த இனிப்பு

 

T. அகிலமுதன்

I – B

             சுவையும், சத்தும் நிரம்பிய இந்த பால்கோவா செய்வதற்கு மிகவும் எளிதானது இது எனக்கு மிகவும் பிடித்த இனிப்பு பண்டம் ஆகும்.

               பாலை சுண்டக் காய்ச்சினால் கிடைப்பது தான் கோவா.

               தேவையான பொருள்கள்: 1.       பால்   2.            சீனி   3.              நெய்

 

                              இவற்றைச் சேர்த்து நன்கு காய்ச்சினால் சுவையான பால்கோவா கிடைக்கும்.


 

ரா. அகின் ஆதவ்

I – B

               எனக்கு பிடித்த இனிப்பு லட்டு. லட்டு மிகவும் சுவையாக இருக்கும். அதில் இருக்கும் முந்திரி திராட்சை எனக்கு மிகவும் பிடிக்கும். என் பாட்டி மிகவும் சுவையாக லட்டு செய்வார்கள். எனவே எனக்கு மிகவும் பிடித்த இனிப்பு லட்டு.

 

அ. அணுக்கிரித்தா

I – B

               எனக்கு மிகவும் பிடித்த இனிப்பு நெய் பணியாரம். அதில் சேர்க்கப்படும் வெல்லத்தின் சுவையும் நெய்யின் மணமும் மீண்டும் வேண்டும் என்றே கேட்கத் தோன்றும். இது உடலுக்கு ஆரோக்யமானதாகவும் இருக்கும்.

  

L.S.Asmith

I – A

                எனக்கு பிடித்த இனிப்புப் பண்டம் என் பாட்டி செய்யும் லட்டு பல வகை லட்டுகள் உள்ளன. பூந்தி லட்டு, ரவா லட்டு, அவல் லட்டு, சத்துமாவு லட்டு, தேங்காய் லட்டு, சிறுதானிய லட்டு, எள்ளுருண்டை. திருப்பதி லட்டு, கடலை மாவு, சர்க்கரை, ஏலக்காய், முந்திரிப்பருப்பு, உலர் திராட்சை, கிராம்பு, கல்கண்டு ஆகியவற்றைக் கொண்டு செய்யப்படும் சுவையான இனிப்பு வகை.  பூந்தி லட்டு எனக்கு மிகவும் பிடிக்கும்.

 

V.K.Gowtham Krishna

I – A

 

               எனக்கு மிகவும் பிடித்த இனிப்பு ஜிலேபி எனது அம்மா எனக்கு அடிக்கடி வாங்கித்தருவார். மிகவும் இனிப்பாகவும் சுவையாகவும் இருக்கும். அனைத்தும் ஜுரா வடிய வடிய சாப்பிடும்போது மிகவும் அருமையாக இருக்கும்.

 

T. Harish Ahemed

 I – B

               இனிப்பு பண்டங்களில் எனக்கு மிகவும் பிடித்தது ரசகுலா. இது கொல்கத்தாவில் மிகவும் பிரபலமானது. இங்கு செய்யப்படும் ரசகுலாவின் சுவை மிகவும் சுவையானது.

               பண்டிகைக் காலங்களில் இதை அடிக்கடி எங்கள் வீட்டில் சமைத்து உண்போம். வெள்ளை பந்துகள் போன்று மென்மையாக இருக்கும்.. இதில் பால், சர்க்கரை, நீர் சேர்ந்துள்ளதால் இதன் சுவை எனக்கு மிகவும் பிடிக்கும்.

               மேலும் ஏலக்காய் பொடி மற்றும் பிஸ்தாவை தூவினால் நறுமணம் கூடுதல் சுவையைத் தரும். எனவே இனிப்பு பண்டத்தில் நான் ரசகுலா பிரியர் எனவே சொல்லலாம்.

                                                                                          நன்றி

 

மா. மிதன்யா

I – B

               எனக்கு எல்லா இனிப்பும் பிடிக்கும். ஆனால் லட்டும், பாது~hவும் ரொம்ப பிடிக்கும். அது சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும். இனிப்பு என்றாலே எனக்கு முதலில் நினைவில் வருவது லட்டு மற்றும் பாது~h. பாது~h தேனின் சுவையை விட மிகவும் சுவையானது.

 

மிதுன்யஸ்ரீ

I – B

               ஜீலேபி பார்த்தாலே நாவில் ஊற வைக்கும் நிறத்திலும், சுவையிலும் உள்ள ஜிலேபி எனக்கு மிகவும் பிடிக்கும்.

 

S. Mohammed safran

 I – B

               எனக்கு மிகவும் பிடித்த இனிப்பு நெய் மைசூர்ப்பா. அதனால் என்னுடைய அம்மா மாதம் ஒரு முறையாவது செய்து தருவாங்கள். இதில் அதிகம் நெய் ஊற்றி செய்தால் அதனுடைய வாசனையே நம்மை சுவைக்க சொல்லி நம் மணம் ஏங்கும். இது வாயில் போட்டால் கரையும்.

 

நவநீதா

I – B

               எனக்கு பிடித்த இனிப்பு பண்டம் அல்வா. அது திருநெல்வேலியில் பிரபலமானது. அதில் எனக்கு சிவப்பு அல்வா பிடிக்கும்.

  

Sai Dhaksha

I – B

               எனக்கு மிகவும் பிடித்த இனிப்புப் பண்டம் லட்டு. எனது அம்மா பண்டிகை நாட்களில் எனக்கு பிடித்த இனிப்பு பண்டத்தை செய்து தருவார்கள் மிகவும் சுவையாக இருக்கும்.

 

சங்கமித்ரா. பா.ஜெ

I – A

              

               எனக்கு மிகவும் பிடித்த இனிப்புப் பண்டம் நெய் மைசூர்பாக். மைசூர்பாக்கில் நெய், சர்க்கரை, கடலைமாவு போன்ற பொருட்கள் சேர்க்கப்படுவதால் மிருதுவாக, சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.

 

T. Selva Nithish

I – A

               எனக்கு மிகவும் பிடித்த இனிப்புப் வகை குளோப்ஜாமூன், தேங்காய்பருப்பி, மைசூர்பாக்கு பண்டிகை நாட்களில் எனது வீட்டில் அம்மா செய்து தருவார்கள் அது எனக்கு மிகவும் பிடிக்கும் சுவையாக இருக்கும். நான் விரும்பிக்  கேட்கும் போதெல்லாம் என் அம்மா செய்து தருவார்கள். அதை விரும்பி உண்பேன்.

 

N.P. Siva Preyan

 I – B

               எனக்கு மிகவும் பிடித்த இனிப்புப் பண்டம் பூந்திலட்டு, ஜிலேபி பால்கோவா ரொம்ப பிடிக்கும்.

 

S. Vijay Karthik

I – A

               எனக்கு மிக பிடித்த இனிப்பு குலோப்சான். பிடிக்கும் என் வீட்டில் அம்மா அடிக்கடி செய்வார்கள்.

 

 

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...