அக்டோபர் 1, 1792: பிரிட்டனில் மணியாடர் பட்டுவாடா அறிமுகம் செய்யப்பட்டது . அக்டோபர் 1, 1847: அன்னிபெசன்ட் அம்மையார் பிறந்த நாள் . அக்டோபர் 1, 1848: முதன் முதலாக பாஸ்டன் நகரில் மன வளர்ச்சி குன்றியவர்களுக்காக தனியாக ஒரு பள்ளிக்கூடம் ஆரம்பிக்கப்பட்டது . அக்டோபர் 1, 1854: இந்தியாவில் முறையான தபால் போக்குவரத்து துவங்கப்பட்டது . அக்டோபர் 1,1869: ஆஸ்திரியா அஞ்சல் நிலையத்தில் முதன் முதலில் போஸ்ட் கார்டு விற்பனை செய்ய ஆரம்பிக்கப்பட்டது . அக்டோபர் 1, 1870: பிரிட்டனும் ஆஸ்திரியாவைப் பின்பற்றி போஸ்ட் கார்டு விற்பனையைத் துவக்கியது . அக்டோபர் 1,1880: எடிசன் லாம்ப் வொர்க்ஸால் முதன்முதலில் மின் விளக்குகள் வாலிப ரீதியில் தயாரிக்கப்பட்டது . அக்டோபர் 1, 1882: பிரிட்டனில் ரிப்ளை பெய்டு போஸ்ட் கார்டு விற்பனை ஆரம்பிக்கப்பட்டது . அக்டோபர் 1, 1918 மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையின் நிறுவனரும் தொழிலதிபருமான கண் மருத்துவர் ஜி.வெங்கடசாமி பிறந்த நாள். அக்டோபர் 1, 1928: நடிகர் திலகம...