ஜனவரி 1, 1772 டிராவலர்ஸ் செக் என்னும் பயணிகள் காசோலை முதன்முதலாக லண்டனில் இன்று அறிமுகம் செய்யப்பட்டது. ஜனவரி 1,1785 டைம்ஸ் நாளிதழ் பற்றி நமக்குத் தெரியும். உலகப் புகழ் பெற்ற நாளிதழ்களுள் இதுவும் ஒன்று. இந்த நாளிதழ் லண்டனிலிருந்து வெளி வருகிறது. அது இன்று தான் துவக்கப்பட்டது. முதலில் யுனிவர்சல் டெய்லி ரெஜிஸ்டர் என்ற பெயரில் இது ஆரம்பிக்கப்பட்டது. அமெரிக்கா விடுதலை இயக்கத்திற்கு ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னரும் பிரெஞ்சு புரட்சிக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்னதாகவும் இதன் முதல் இதழ் வெளியானது. அப்போது இதனுடைய விற்பனை ஆயிரம் பிரதிகள் மட்டும்தான். இப்போதோ பல லட்சம் பிரதிகள் விற்கின்றன. ஜனவரி 1,1842 சென்னையில் புதிய கலங்கரை விளக்கம் இன்றுதான் அமைக்கப்பட்டது. ஜனவரி 1, 1877 இந்தியாவின் வைஸ்ராயான லிட்டன் பிரபு டில்லியில் விக்டோரியா மகாராணியை இந்தியாவின் மகாராணி என்று அறிவித்தார். ஜனவரி 1,1904 கார்களில் நம்பர் பிளேட் மாட்ட வேண்டும் என்ற மோட்டார் வாகனச் சட்ட விதி முதன் முதலாக லண்டனில் இன்று அமலுக்கு கொண்டுவரப்பட்டது. ஜனவரி 1,1919 இந்தியாவில் அரசு எதிர்ப்பு...