அவள் கண்கள் அவ்வளவு அழகு.
அவள் கண்ணைப் பார்த்து மீன் என நினைத்துக் கொண்டது ஒரு மீன் கொத்திப் பறவை.
அந்த மீனைப் பிடிக்க வேண்டும் என அவள் முகத்தை நோக்கிப் பறந்தது.
அருகில் சென்ற பிறகு தான் கண்ணுக்கு மேல் உள்ள அவள் புருவத்தை அது கவனித்தது.
வில் போன்ற அவள் புருவத்தைப் பார்த்தவுடன் 'தன்னைக் கொல்லக் காத்திருக்கும் வில்லல்லவா இது' என்று வந்த வேகத்தில் திரும்பிப் பறந்து போய்விட்டது.
கண்கயல் என்னுங் கருத்தினால் காதலி
பின்சென்றது அம்ம சிறுசிரல்; -பின்சென்றும்
ஊக்கி யெழுந்தும் எறிகல்லா ஒண்புருவங்
கோட்டிய வில்வாக் கறிந்து.
(நாலடியார்)
கயல் - மீன்
சிறுசிரல் - சிறிய மீன் கொத்திப் பறவை
ஊக்கியெழுந்து -ஆர்வத்தோடு முயன்று
எறிகல்லா - அந்த கண் மீனை கொத்த முடியவில்லை
ஒண்புருவங் - ஒளி பொருந்திய புருவங்கள்
கோட்டிய - வளைந்த
வில்வாக் கறிந்து -வில்லென்று அறிந்து
Comments
Post a Comment
Your feedback