தமிழ் இலக்கணத்தில் சிறப்பானது உருவகம்.
தண்டியலங்காரம் கூறும் உருவக
அணி வகைகளுள் சிறப்பு உருவகமும் ஒன்று.
அது என்ன சிறப்பு உருவகம்?
சிறப்பு உருவகம் என்பது ஒரு
பொருளை எடுத்துக்கொண்டு அதற்கு சிறந்த அடைகளை உருவாக்கி உருவகப்படுத்துவது.
தன் மனத்தில் உள்ள பெண்ணை பருவ காலமாக
உருவகப்படுத்துகிறான் அவன். பருவ காலங்களில் சிறப்பான வசந்தமாகத் தெரிகிறாள் அவள்.
காலங்களில் சிறந்த
வசந்தத்தோடு அவன் கற்பனை முடிந்துவிடவில்லை.
கண்ணதாசன் வரிகளில் அவன்
காட்டும் அவள் இவள்.
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை
பறவைகளில் அவள் மணிப்புறா
பாடல்களில் அவள் தாலாட்டு
கனிகளிலே அவள் மாங்கனி
காற்றினிலே அவள் தென்றல்
பால் போல் சிரிப்பதில் பிள்ளை
அவள் பனி போல் அணைப்பதில்
கன்னி
கண் போல் வளர்ப்பதில் அன்னை
அவள் கவிஞன் ஆக்கினாள் என்னை
Comments
Post a Comment
Your feedback