அவநுதி உருவகம் என்பது
உருவகங்களுள் ஒரு வகை.
அவநுதி என்பதற்கு உண்மையை மறைத்தல் என்பது பொருள்.
ஒரு பொருளின் உண்மைத் தன்மையை மறைத்து உருவகிப்பது
அவநுதி உருவகம்.
"சிறப்பினும், பொருளினும், குணத்தினும், உண்மை
மறுத்துப்
பிறிது உரைப்பது அவநுதி ஆகும்."
தண்டியலங்காரம் பா-75.
அவன் அவளைப் பார்க்கிறான்.அவள்
அவனுக்குப் பொன் போலக் காட்சி தருகிறாள்.அந்த அழகில் அவளது உருவம் மறைந்து பொன்
மட்டுமே அவனுக்குத் தெரிகிறது.
பூப்போலத் தோன்றிய அவள் முகம்
மறைந்து பூ மட்டுமே அவளாக அவன் மனதில் பதிந்து விடுகிறது.
கண்ணதாசனின் இந்த வரிகள் தண்டியலங்காரம் கூறும்
அவநுதி உருவகத்தில் அமைந்தவை.
Comments
Post a Comment
Your feedback