யாரையும் குறைத்து மதிப்பிட்டு விடாதே.
உன்னிடம் எந்த உதவியும் பெறாத ஒருவர் உனக்கு ஒன்றைக் கொடுக்க விரும்பினால் அவர் கை மேலேயும் உன் கை கீழேயும் இருக்குமாறு எதையும் வாங்காதே.
உன்னைப் புண்படுத்தும் வகையில் நடந்து கொண்டாலும் கூட எளிய குடும்பத்தில் பிறந்தவர்களிடம் எப்போதும் கோபப்படாதே.
பதற்றத்தில் இருக்கும் போது சொல்லக்கூடாத வார்த்தைகள் எதுவும் உன் வாயில் இருந்து வந்த விடாமல் கவனமாக இரு.
எள்ளற்க, என்றும் எளியரென்று என்பெறினும்
கொள்ளற்க, கொள்ளார்கை மேற்பட! உள்சுடினும்
சீறற்க, சிற்றில் பிறந்தாரை! கூறற்க,
கூறல்ல வற்றை விரைந்து!
(நான்மணிக்கடிகை)
Comments
Post a Comment
Your feedback