சிவகாமியின் சபதம்
- கல்கி
சரித்திரத்தின் பாதையில் காலம் பிறப்பித்த பல சிருஷ்டிகளில்... பல வகை பரிமாணங்களில் ஒன்றை...
பல்லவ சாம்ராஜ்யத்தின் மகேந்திர சக்கரவர்த்தியையும் மாமல்லரையும் அவரது அவையோடு அருகிருந்து கண்ட அனுபவத்தை தருகிறது சிவகாமியின் சபதம்.
அந்தப் புறத்தில் பல பெண்களைக் கொண்டிருக்கும் ஒவ்வொரு மன்னனும் பெண்ணாசை கொண்டவன் என்று பொதுவான எண்ணத்தை மாற்றி 'அது அப்படி அல்ல' அது ஒரு நிர்பந்தத்தோடு கூடிய ராஜதந்திரம் என்ற ஆழமான உண்மையைக் கூறுகிறது கதை.
ஆயனச் சிற்பியின் சிற்பக்கலை ஆர்வம், அஜந்தா வர்ண ரகசியத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்ற உந்துதல் இவை சராசரி மனிதர்களுக்கும் கீழே அவரை தள்ளிவிட்டது காலத்தின் விளையாட்டு.
ஆயிரம் முக பாவங்களை அழகாக வெளிக்காட்டினாலும் கூட நானும் சுக துக்கங்களில் தடுமாறும் ஒரு சராசரிப் பெண் தான் என்று காட்டுகிறது சிவகாமியின் படைப்பு.
இளமையில் இருந்த துணிவும் மனோதிடமும் முதுமையில் எளிதாக தடம் புரளும். அப்போது அவர்கள் கொடூரமான செயல்களுக்கும் அஞ்ச மாட்டார்கள். கண்மூடித்தனமான காதல் எடுத்துக் கொண்ட வேலையை முழுமையாக செய்ய விடாமல் அழிவுக்கு வழி செய்துவிடும் என்பதை உணர்த்துகிறது நாகநந்தினி பிட்சுவின் வாழ்க்கை.
மண்ணாசை இல்லாத மன்னர்களும் இருந்தார்கள் என்று காட்டிய பாண்டியன் வாழ்க்கை, சென்ற இடமெல்லாம் சைவத் திருநெறி பரப்பிய ஞானசம்பந்தர், அகிம்சையை விரும்பினாலும் தந்திரங்களில் வெல்ல முடியாத பல்கலை வித்தகர் மகேந்திர பல்லவர், போர் வெறியன் சாளுக்கிய புலிகேசி, ஏகபத்தினி விரதம், தந்தை சொல்லே மந்திரம் என வாழ்ந்து வந்த மாமல்லன், உண்மையான தளபதியாக இருந்து அகிம்சை நெறி திரும்பி துறவு பூண்ட தியாகம் என ஒரு சாம்ராஜ்யம் முழுமையும் கடந்து வந்த அனுபவம்.
ஒரு சரித்திர நாவலை மர்ம நாவல் போல எழுத முடியும் என்று நிரூபித்திருக்கின்றது கல்கியின் எழுத்து.
ஹர்ஷவர்த்தனரைப் பற்றி மெலிதாகப் பேசுகிறது கதை.
Comments
Post a Comment
Your feedback