R.Anisha
IV
– A
நான் தாத்தா பாட்டியிடம் இருந்து கற்றுக் கொண்ட
ஒரு நல்ல குணம்
ஒழுக்கத்தையும், பெரியவர்களிடம் மரியாதையாகவும் மற்றும் பணிவோடும் அன்பாக
பேசவும் கற்றுக்கொண்டேன். புதிய நபர்களுடனும், குடும்பத்தில் சொந்த பந்தங்களுடன் எவ்வாறு நடந்து
கொள்ளவேண்டும் என்றும் கற்றுக்கொண்டேன்.
ச. தீக்சனா
IV
– A
• யாரிடமும் சண்டையிடக் கூடாது.
• அனைவரிடமும் பொறுமையுடன் நடந்து கொள்ள
வேண்டும்.
• அனுமதியின்றி மற்றவர் பொருளை எடுக்கக் கூடாது.
• வாங்கிய பொருளை உரியவரிடம் கொடுக்க வேண்டும்.
• எந்த ஒரு வேலையையம் ஆர்வத்துடன் செய்ய
வேண்டும்.
• சோம்பேரித்தனம் இல்லாமல் செயல்பட வேண்டும்.
• பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும்.
• அனைவரிடமும் அன்புடன் பழக வேண்டும்.
• அதிகம் கோபம் கொள்ளக்கூடாது.
S.Lakshaya
IV
– A
நான் தாத்தா, பாட்டியிடம் கற்றுக்கொண்ட நல்ல குணங்கள். எங்கள்
குடும்பத்தில் உள்ளவர்களிடமும் மற்றவர்களிடமும் மரியாதையாக பேசுவது.
இரவில்
அறிவுப்பூர்வமான கதைகள் சொல்லிக்கொடுப்பது.
அ. லித்திகா
IV
– A
எனது தாத்தா பாட்டியிடம் இருந்து நான்
கற்றுக்கொண்ட நல்ல குணம்.
வீட்டிற்கு யாராவது வந்தால் வாங்க என்று
கூப்பிடவேண்டும்.
உணவை பகிர்ந்து கொடுத்து சாப்பிடவேண்டும்.
சே.லுக்மான்
IV
– A
என்னுடைய தாத்தாவும் பாட்டியும் பெரியவர்களிடம்
மரியாதையாக பேச வேண்டும் என்றும் மற்றவர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளைச் செய்ய
வேண்டும் என்றும் மேலும் நன்றாக படிக்க வேண்டும் எனவும் சொன்னார்கள். வெளியில்
போக்குவரத்துச் சாலைகளில் கவனமாக செல்ல வேண்டும், பொய் பேசக்
கூடாது, இதுபோல நிறைய குணங்களைக்
கற்றுக் கொடுத்துத்துள்ளார்கள்.
சு.ரா. சர்விந்த்
IV
– B
• அதிகாலை துயில் எழுதல்
• கனிவாக பேசுதல்
• உறவினர் மற்றும் நண்பர்களை வரவேற்றல்
• விருந்தோம்பல்
• மற்றவர்களுக்குக் கொடுக்கும் குணம்
• பாரம்பரிய உணவுகள் உண்ணுதல் (ராகி, சோளம்)
• சரியாகத் திட்டமிடுதல்
• ஆளமாக வாசிக்கும் திறன்
க. அ. ஸ்ரீகாரணி
IV
– A
தாத்தா, பாட்டியிடம் இருந்து நான் கற்றுக் கொண்ட ஒரு நல்ல குணம்
என்னவென்றால் யார் பசி என்று வந்தாலும் நாம் வீட்டில் இருக்கும் உணவை
பகிர்ந்தளிக்க வேண்டும். அனைவரிடமும் அன்பாய் பொறுமையாய் இருக்க வேண்டும்.
வீட்டிற்கு யார் வந்தாலும் உபசரித்து முதலில் தண்ணீர் வழங்குதல். பெரியவர்கள்
முன்னால் எழுந்து நின்று அவர்களுக்கு மரியாதை செய்தல். தம்பி, தங்கைகளை அன்போடு அரவனைத்து விட்டுக்கொடுத்து
விளையாடுதல். நான் கற்றுக்கொண்டவை எனலாம். பொருமை, நிதானம், உபசரிப்பு,
விருந்தோம்பல், விட்டுக்கொடுத்தல், அன்பு இவை அனைத்தும் நான் கற்றுக் கொண்டவை ஆகும்.
பா. ஸ்வேதா
IV
– B
தாத்தா, பாட்டியிடம் இருந்து நான் கற்றுக் கொண்ட ஒரு நல்ல குணம்.
தன்மை, பொறுமை, பாசம். கதை சொல்லி இருக்கிறார்கள்.
K.Vihashini
IV
– B
என் பாட்டியிடம் இருந்து ஒரு வேலையை அன்றே
அப்பொழுதே காலம் தாழ்த்தாமல் செய்யக் கற்றுக் கொண்டேன். என் பாட்டியிடம் இருந்து
நல்ல விடுகதையை கற்றுக் கொண்டேன்.
அ. அல்ஃயா
IV
– B
• பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும்.
• பொய் சொல்ல கூடாது
• திருடக் கூடாது
• பிறருக்கு உதவி செய்திடல் வேண்டும்
• யாரையும் ஏமாற்றக்கூடாது
• பொறுமையாக இருத்தல் வேண்டும்
A.Andal Priyadharshini
IV
– B
என் தாத்தாவும்
பாட்டியும் எனக்கு நிறைய நல்ல குணங்களை போதித்துள்ளனர்.
அதாவது யாரிடமும்
பொய் சொல்லக் கூடாது. யாருடனும் சண்டை போடக் கூடாது. எல்லோரிடமும் அன்பாகவும்
பணிவாகவும், கனிவாகவும் நடந்து கொள்ள
வேண்டும். யாருடைய பொருளுக்கும் ஆசைப் படக்கூடாது பெரியவர்களை மதித்து நடந்து
கொள்ள வேண்டும். பொது இடங்களில் கவனிப்புடனும். எச்சரிக்கையுடனும் நடந்து கொள்ள
வேண்டும். இவை அனைத்தும் எனக்கு பயனுள்ள தானதால் அவர்கள் கூறும் அனைத்தையும் நான்
கற்றுக் கொண்டேன். ஏனெனில் வீட்டில் பெரியவர்கள் எப்போதும் நமக்கு நன்மையையே நினைப்பார்கள்.
ச.அ.யாழினி
V - B
• ஓற்றுமையாக
இருக்க வேண்டும்.
• காலையில் சூரியன்
உதிவதற்கு முன்னதாக எழுந்திருக்க வேண்டும். பல்துலக்குதல், துளித்தல்
வேண்டும். எல்லோரும் ஒன்றாக கூடி மூன்று
நேரமும் சரியான நேரங்களில் சாப்பிட வேண்டு;ம்.
தொலைக்காட்சி பார்ப்பதை தவிர்த்து நடைப்பயிற்சி
செய்ய வேண்டும்.
M.Yogesh
V - B
• நன்றாக படிக்க வேண்டும் என்று பாட்டி
சொன்னார்கள்.
• எனது வீட்டிற்கு வரும் உறவினர்களை வணக்கம்
என்று அன்போடு வரவேற்க வேண்டும்.
• “தன் கையே தனக்கு
உதவி” என்று இருக்க வேண்டும் என்று கூறினார்கள்.
• “யாரையும் எளிதில்
நம்பிவிடாதே”
• உனக்கு மிகப்பெரிய சொத்து “கல்வி”.
இதுவே நான் என் தாத்தா, பாட்டியிடம் கற்றுக்கொண்ட நல்ல குணம்.
நன்றி.
வி.ஸ்ரீநாத்
V - B
• நான் என் தாத்தா, பாட்டியிடம் கற்றுக்கொண்ட நல்ல குணம்.
• அனைவரிடமும் அன்பாக பழக வேண்டும்.
• அதிகாலையில் எழுந்து கொள்ள வேண்டும்.
• சாப்பிடும் முன் கைகளை நன்றாகக் கழுவ வேண்டும்.
• அதிக கோபம் கொள்ளக்கூடாது.
• எந்த ஒரு செயலையும் விருப்பத்துடன் செய்ய
வேண்டும்.
• யாரிடமும் கோபம் கொள்ளாமல் பொறுமையுடன் நடந்து
கொள்ள வேண்டும்.
S.Samyuktha Shivani
V
- B
பாட்டியிடம்
இருந்து கற்றுக்கொண்ட நல்ல குணம்.
• உண்மை பேசுதல்
• கீழ்படிதல்
• பிறருக்கு உதவுதல்
• ஓழுக்கம்
• தன் வேலை தானே செய்தல்
• அன்பு செலுத்துதல்
• படித்தல்
• போட்டியில் பரிசு வாங்குதல்
இது போன்ற நல்ல
பண்புகளைக் கற்றுக்கொண்டேன்.
நன்றி.

Comments
Post a Comment
Your feedback