The sands of time
- Sydney Shelton
1936 லிருந்து ஸ்பெயின் அரசுக்கும் Basques க்கும் இடையே நடந்து வந்த யுத்தத்தை களமாகக் கொண்ட கதை.
ஸ்பெயினில் 1936 இல் பிப்ரவரி முதல் ஜூன் முடிய நடந்த 269 அரசியல் கொலைகளை அடிப்படையாகக் கொண்டு கதையின் வேர்கள் பயணிக்கின்றன.
முதல் அத்தியாயம் சிறையில் இருக்கும் தன் சகாக்களை விடுவிக்க Jaime Miro வின் Bullfight தந்திரத்தோடு கதை துவங்குகிறது.
அவர்களோடு சேர்ந்த நான்கு nuns (கன்னியாஸ்திரிகள்).
LUCIA
மாஃபியா தொடர்புகளால் தந்தையும் சகோதரர்களும் சிறைக்குச் செல்ல அவர்களின் நிலைக்கு பழிவாங்க இரண்டு கொலைகளை செய்துவிட்டு தலைமறைவாகி கான்வென்ட்க்கு வந்து மௌன வாழ்க்கை துவங்கினாலும், Swiss தப்பிச் சென்று தந்தையின் பேங்க் அக்கவுண்ட்டை எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சரியான வாய்ப்பிற்காக காத்திருக்கும் Lucia ஒரு அழகிய இளம் nun .
GRACIELLA
தாயின் தடம் புரண்ட முறைகேடான வாழ்க்கையை அருகிருந்து கவனித்ததால் தடுமாறிய ஒரு கணத்தில் தாயால் தாக்கப்பட்டு நினைவிழந்த நிலையில் ஹாஸ்பிடலில் சேர்க்கப்பட்டு நிராதரவாக விடப்பட்டு, தந்தையின் மூலமாக கான்வென்டில் விடப்பட்ட பேரழகு வாய்ந்த இளம் (nun)பெண் Gracillia.
MEGAN
-Scott family யின் வாரிசு.
ஆனால் சித்தி Ellon Scott ன் வஞ்சனையால் plane விபத்துக்குள்ளான போதும் பிழைத்துக் கொள்கிறாள்.
பிழைத்த போதும் அனாதையாக்கப்பட்டு கான்வென்டில் அடைக்கலம் புகுந்து வாழும் 17 வயதுப் பெண் இந்த Megan.
TERESA
60 வயதான பெண். காலத்தின் கர்ண கொடூரமான நிகழ்வுகளால் வாழ விரும்பாமல் 'கடவுளிடம் ஐக்கியம் புகுந்த' பெண் இவர்.
அழகாக பாடத் தெரிந்த, பிறர்க்கு கெடுதல் நினைக்காத வலுவான கேரக்டர் Terasa.
இவர்கள் நான்கு பேரும் தான் அந்த nuns.
Jaime Miro வின் கூட்டாளிகளுடன் இந்த nuns பயணம் காடு, மலை, எல்லாம் கடந்து போகும் போதே ஒவ்வொருவரைப் பற்றிய flashback
நுண்ணிய பல வேலைப்பாடுகள் கொண்ட hand made art work போல
எல்லா கேரக்டர்களையும் பின்னிப் பிணைத்துக் கொண்டு செல்கின்ற லாவகம் ஷெல்டனுக்கே உரிய அழகான நடை.
Terasa வின் மரணம் மனதை என்னவோ செய்தது.
சில நேரங்களில் miracles போல சற்றுச் செயற்கையாக அமைக்கப்பட்ட கதைப் போக்கைத் தவிர விறுவிறுப்பு குறையாமல் செல்கிறது கதை.
Graciella வை மீண்டும் கான்வென்ட்டுக்கே அழைத்துச் சென்ற போதும் Lucia, Megan இருவரும் உலக வாழ்க்கையோடு இருப்பதாக கதை முடிகிறது.
Jaime ஒரு ரியல் ஹீரோவாக காட்டப்படுகிறார்.
ஸ்பெயினில் இன்றளவும் நடந்து வருகின்ற கொரில்லா போரின் வேர்கள் சிலவற்றை அடையாளம் கண்டுகொண்ட உணர்வு படித்து முடித்த பின் வருகிறது.
'அவ்வளவு எளிதில் மறக்க முடியாது' என்பதைப் போன்ற எண்ணம் படிக்கும் ஒவ்வொருவருக்கும் வரும்.
Comments
Post a Comment
Your feedback