திருமணம் முடிந்து சில மாதங்கள் தான் ஆகிறது. பொருள் தேடப் போக வேண்டும் என்று புறப்படுகிறான் அவன்.
அப்போது அவள் தோழி சொல்கிறாள்.
கொளுத்தும் கோடை வெய்யில்
கொடுமையான காட்டு வழி
போக நினைத்து விட்டாய்.
அப்படிப் போய் நீ
கொண்டுவரும் பொருள்
உன்னையே நினைத்து
வாழ்ந்துகொண்டிருப்பவளுக்கு
இன்னும் சில நாட்களில்
பிறக்க இருக்கும் மகனின்
முறுவல் சிரிப்பைக்
காண்பதை விடவும்
இனிமையானதோ
உனக்கு!
வேனில் திங்கள் வெஞ் சுரம் இறந்து
செலவு அயர்ந்தனையால் நீயே; நன்றும்
நின் நயந்து உறைவி கடுஞ் சூல் சிறுவன்
முறுவல் காண்டலின், இனிதோ
இறு வரை நாட! நீ இறந்து செய் பொருளே?
(ஐங்குறுநூறு 310)
Comments
Post a Comment
Your feedback