அரிய பொருளைத் தேடவேண்டும்;
நிறைய சம்பாதிக்க வேண்டும் என்பது என் விருப்பம்.
அதற்காக
உன்னை விட்டுவிட்டு
கரடு முரடான
மலைப்பாதை வழியில்
சென்றேன்.
உன்னைப் பிரிந்து போகும் போது
அந்த வழி நெடியதாகத் தோன்றியது.
பொருளை ஈட்டிய பின்
நான் திரும்பி வருவதும்
அதே நீண்ட வழிதான்.
என்றாலும் உன்னை நினைத்தேன்.
தொலைவு சிறிதாகிவிட்டது.
அரும் பொருள் வேட்கையம் ஆகி, நிற் துறந்து,
பெருங் கல் அதரிடைப் பிரிந்த காலைத்
தவ நனி நெடிய ஆயின; இனியே,
அணியிழை உள்ளி யாம் வருதலின்
நணிய ஆயின சுரத்திடை ஆறே.
(ஐங்குறுநூறு 359)
Comments
Post a Comment
Your feedback