அம்மையப்பா உங்கள் அன்பை மறந்தேன்
என்ற புகழ்பெற்ற தமிழ்ப் பாடலை இயற்றிய பாபநாசம் சிவன் தமிழ்ச் சொல்லே இல்லாமல் பாடியது இந்தப் பாடல்.
இது 1944ல் திரையரங்கில் 750 நாட்களுக்கு மேல் ஓடிய ஹரிதாஸ் படத்தில் தியாகராஜ பாகவதர் பாடிய பாட்டு.
கிருஷ்ணா
முகுந்தா முராரே - ஜெய
கிருஷ்ணா முகுந்தா முராரே - ஜெய
(கிருஷ்ணா முகுந்தா முராரே)
கருணா சாகர கமலா நாயக
கருணா சாகர கமலா நாயக
கனகாம்பர தாரி கோபாலா
(கிருஷ்ணா முகுந்தா முராரே)
(கருணைக் கடலே,
கமலை மணாளா
பொன்னுடை சூடிய கோபாலா)
காளிய மர்த்தன கம்சனி தூஷண
காளிய மர்த்தன கம்சனி தூஷண
கமலாதள நயனா கோபாலா
(கிருஷ்ணா முகுந்தா முராரே)
(காளிங்க நடனா,
கம்சனை
வென்றாய் –
தாமரை உன் திருவடி கோபாலா)
குடில குண்டலம் குவலய தள நீலம்
மதுர முரளீர் அவ லோலம்
கோடி மதன லாவண்யம்
கோபி புண்யம் பஜாமி கோபாலம்
(வளைந்த காதணி,
குவளையின்
நீலம் –
இனிய குழலின்
மயக்கும் நாதம்
கோடி
மன்மத அழகு மோகம் –
கோபியர் வரமே, கோபாலனைப் பாட)
கோபி ஜன மனமோகன வியாபக
குவலய தள நீலா கோபாலா...
குவலய தள நீலா கோபாலா...
குவலய தள நீலா கோபாலா...
(கிருஷ்ணா முகுந்தா முராரே)
(கோபியர் மனத்தை மோகித்து நிறைந்தாய் - கருங்
குவளை நீலக் கண்ணா - கோபாலா)
பாபநாசம் சிவன் நெற்றி நிறைய திருநீறு பூசியபடி சிவன்
கோயில் முன்பு மனமுருகிப் பாடுவார். பரமசிவனே பாடுவதாக கருதிய மக்கள் ‘பாபநாசம்
சிவன்’ என்றனர். அதுவே பெயராக நிலைத்து, அவருடைய உண்மைப்பெயர்
யாருக்கும் தெரியாமலேயே போய்விட்டது.
Comments
Post a Comment
Your feedback