அவள் தோழி அவனிடம் கூறுகிறாள்.
அடர்ந்த கருங்கூந்தல்
மெல்லிய இயல்பு
இப்படியாக இவள்.
நீ இவளைப்
பிரியாமல் இருந்தால்
நல்லது.
நீயோ
பொருள் தேடப் போயே
ஆக வேண்டும் என்று நினைக்கிறாய்.
மடல் விரிந்த
மலர்க் கொத்துகளுடன்
எறுழம் பூ கொட்டிக்கிடக்கும்
இந்த மலை
முருகப் பெருமானுக்குப்
பிரியமான மலை .
இந்த மாமலையை
உன்னால்
பிரிந்து போகமுடியுமானால்
நீ
பிரிந்து போ.
பல் இருங் கூந்தல் மெல்லியலோள்வயின்
பிரியாய் ஆயினும் நன்றே; விரிஇணர்க்
கால் எறுழ் ஒள் வீ தாஅய
முருகு அமர் மா மலை பிரிந்தெனப் பிரிமே.
(ஐங்குறுநூறு 308)
Comments
Post a Comment
Your feedback