கட்டோடு குழலாட ஆட ஆட
கண் என்ற மீன் ஆட ஆட
பொட்டோடு நகையாட ஆட ஆட
கொண்டாடும் மயிலே நீ ஆடு
எந்தக் காலத்துக்கும் நின்று கேட்க வைக்கும் இந்தப் பாடல் கண்ணதாசன் எழுதியது .
கடவுள் நினைவில் காதலாகிக் கசிந்துருகி அடியார்கள் பாடிய பாடல்களில் கூட காதலைக் கண்டவை அவரது பாடல்கள்.
மாணிக்கவாசகரின் திருப்பொற்சுண்ணம் கடவுளைப் பாட அதில் காதலைக் காட்டும் கண்ணதாசன் வரிகள்.
முத்தணி கொங்கைகள் ஆடஆட
மொய்குழல் வண்டினம் ஆடஆடச்
சித்தஞ் சிவனொடும் ஆடஆடச்
செங்கயற் கண்பனி ஆடஆடப்
பித்தெம் பிரானொடும் ஆடஆடப்
பிறவி பிறரொடும் ஆடஆட
அத்தன் கருணையொ டாடஆட
ஆடப்பொற் சுண்ணம் இடித்தும்நாமே.
- மாணிக்கவாசகர்
Comments
Post a Comment
Your feedback