பருவம் வந்துவிட்டது
வெண் பூக்கள்
உதிர்ந்து படிகின்றன
வேப்பமரத்தடியில்..
தேன் போலப் பேசும்
உன்னைப் பார்க்க
பருவம் வரும் முன்
வந்து விடுவேன்
என்றவன் சொல்லிப் போனான்..
போனவன் இன்னும் வரவில்லை
வேப்ப மரம் பூத்து விட்டது
புரியவில்லையா அவனுக்கு!
அவரோ வாரார்; தான் வந்தன்றே
வேம்பின் ஒண் பூ உறைப்ப,
தேம் படு கிளவி அவர் தெளிக்கும் பொழுதே!
(ஐங்குறுநூறு)
Comments
Post a Comment
Your feedback