ஆட்டுப் பால் குடிச்சா
அறிவழிஞ்சு போகுமின்னு
மாட்டுப் பால் குடிச்சா
மறுவழிஞ்சு போகுமின்னு
கலையம் கழுவி
காராம் பசுக் கறந்து
அடுப்பு மொழுகி
அரும்பரும்பாக் கோலமிட்டு
செம்பு வெளக்கி
சிறு உமி பரப்பி
தங்க வெறகொடிச்சு
வெங்கலத்தால் பால் காச்சி
பொன்னு சங்கெடுத்துப்
போட்டாராம் உன் மாமன்.
என்பது ஒரு நாட்டுப்புறப் பாடல்.
இந்தப் பாடல் ஒரு திரைப்படப் பாடலில் ...
ஆட்டுப்பால் குடிச்சா
அறிவழிஞ்சு போகுமின்னு
எருமைப் பால் குடிச்சா
ஏப்பம் வந்து சேருமின்னு
காராம் பசுவோட்டி
வாராண்டி தாய்மாமன்
வெள்ளிச் சங்கு செஞ்சா
வெளக்கி வெக்க வேணுமின்னு
தங்கத்தில் சங்கு செஞ்சு
தாராண்டி தாய்மாமன்...
அதெல்லாம் சரி தான்.
ஆட்டுப்பால் குடித்தால் அறிவு அழிஞ்சு போகுமா?
அதெல்லாம் ஒரு எதுகை மோனை என, வாய்ப்பாட்டில் வந்து விழுந்த வார்த்தைகள்.
அப்படியே நின்று நிலைத்து விட்டன.
அது தான் அந்தப் பாடல்களின் வீரியம்.
Comments
Post a Comment
Your feedback