அது பாரதி விழா.
அதில்
கலந்து கொண்ட ஜெயகாந்தன் ஒரு மணி நேரம் பேசினார்.
“மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்”
என்றார் பாரதி.
நாமா மாதர்களை இழிவு செய்கிறோம்?
ஏராளமான அணிமணிகளைப்
பூட்டிக் கொண்டு அலங்காரப் பதுமைகளாக வலம் வரும் மாதர்கள் அவர்களே அல்லவா அவர்களை
இழிவு செய்து கொள்கிறார்கள்.
அதனால் தான் பாரதி,
“மாதர், தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்”
என்றார்.
பாரதி வரிகளில் அவர்
சுட்டிக் காட்டிய புதிய நயத்தை வியந்து கைதட்டலால் அரங்கம் அதிர்ந்தது.
மாதர்களும் கைதட்டினார்களா
என்பது தெரியவில்லை.
Comments
Post a Comment
Your feedback