Skip to main content

Posts

Showing posts from October, 2021

Greased lightning

How was Arun in class yesterday? When he saw the Principal, he ran out the door like greased lighting. Greased lighting? Yes, he ran out the door very fast. So, greased lightning means someone who moves very fast? Yes, something that moves very fast also. Ok, is there any connection between fast and grease? Grease is a lubricant that we frequently apply to machinery so that it runs smoothly, When a machine is greased, it runs faster and smoother. Of course, so what would happen if lightning were to be greased? It would strike even faster! மின்னல் மாயண்ணன் வந்திருக்காக…

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்

     நாட்டுப்புறப் பாடல் மெட்டுக்கள் சட்டென மனதில் ஒட்டிக்கொள்ளும். நாட்டுப்புறப் பாடலை ஒட்டி மருதகாசி எழுதியது இந்தப்பாடல்.      மழைபெய்து ஓய்ந்த காலத்தில் வயக்காட்டுச் சூழலைப் பார்த்துப் பார்த்து வந்த கற்பனை என்பதை வரிகளில் பயணிக்கும்போதே உணரலாம்.   சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்-இரவில் சோளத்தட்டைப் பல்லாக்கிலே ஊர்வலமாம். நொண்டிக்காலு நண்டுப் பொண்ணு நாட்டியமாம் துரைத்தவளை மேளதாள வாத்தியமாம். கொண்டையில்லாக் கோட்டானும் சுதியை விட்டுப்பாடுச்சாம் கண்சிமிட்டி மின்மினியும் காந்த லைட்டுப் போட்டுச்சாம் நஞ்சை வய சேறு அங்கே சந்தனமாம் நத்தைக் கூட்டுத்தண்ணீரே பன்னீராம் புஞ்சைக் காட்டுக் குருவித்தழை போட்டுக்கொள்ள வெத்தலையாம் வந்திருந்த  கும்பலுக்கு சோறுமட்டும் பத்தலையாம்.     வாள மீனுக்கும் வி லா ங்கு மீனுக்கும் கல்யாணம்  பாடல்   இந்தப் பாட்டின் தாக்கத்தில் உருவாகி இருக்குமோ ! 

மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான்!

  அவன்தான் உன்னைத் திருமணம் முடிப்பதற்காக வருவேன் என்று கூறிச் சென்றும் , நீ பிரிவால் வருந்துவது ஏன் ? எனக் கேட்கிறாள் தோழி.   அதற்கு   அவள்   கூ று கிறாள் . தோழி ,  நீ வாழ்க !  அவன் பொய் கூறுவதில் மிகவும் வல்லமை பெற்ற வன் . நான் இரவில் கனாக் கண்டேன் .    கனவில் அவன் வந் தா ன் .   என்னை   அணைத்துத் தழுவினான் .       உடனே ,  உறக்கத்திலிருந்து விழித்துக்கொண்டேன் .  நான் விழித்துப் பார்த்து , கையால் அவனைத் தேடிய போது   அது உண்மை அல்ல கனவு எனக் கண்டுகொண்டேன்.    நான் தொட்டுத் தடவியது என் படுக்கையைத் தா ன் என்று தெரிந்தது .  வண்டுகள் வந்து விழுந்து வருத்திய குவளை மலரைப்போல் நான் மெலிந்து தனியள் ஆனேன் .  நான் இரங்கத் தக்கவள் . கேட்டிசின் வாழி தோழி அல்கற் பொய்வ லாளன் மெய்யுறல் மரீஇய வாய்த்தகைப் பொய்க்கனா மருட்ட ஏற்றெழுந்து அமளி தைவந் தனனே குவளை வண்டுபடு மலரிற் சாஅய்த் தமியேன் மன்ற அளியேன் யானே.         (குறுந்தொகைப் பாடல்)   பொருள் :  ...

Nip in the bud

  When the kid shows the first signs of misbehaving, you should   nip that bad behavio u r in the bud .   Nip in the bud? What do you mean?   To stop a bad situation from becoming worse by taking action at an early stage of its development.   I s it correct to say, Many diseases  can be nipped   in the bud  if they are detected  early enough. It's very correct.  

தரைய பார்த்து நிக்குது கதிரு

    வயலில் நட்ட பயிர் தண்டு தடித்து இருப்பது பச்சைப்பாம்பு கருவுற்று இருப்பது போலக் காணப்படுகிறது. கதிர் வெளி வந்ததும் பால் பிடிக்காததால் நற்குடிப் பிறவாத செல்வந்தர் போலத் தலை நிமிர்ந்து நிற்கின்றது. பால் கட்டி மணி பிடித்ததும் கல்வி அறிவுடையாரைப் போன்று தலை தாழ்ந்து நிற்கின்றது.   சொல்லரும் சூற்பசும் பாம்பின் தோற்றம்போல் மெல்லவே கருவிருந்து ஈன்று மேலலார் செல்வமே போல்தலை நிறுவித் தேர்ந்தநூற் கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே.              (நாமகள் இலம்பகம் )     தரைய பார்த்து நிக்குது நல்ல கதிரு தன் குறைய மறந்து மேலே பார்க்குது பதரு - அது போல் அறிவு உள்ளது அடங்கி கிடக்குது வீட்டிலே எதுக்கும் ஆகாத சிலது ஆர்ப்பாட்டம் செய்யுது வெளியிலே   அதாலே மனுசன மனுஷன் சாப்பிடுராண்டா தம்பிப்   பயலே இது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலே ( மருதகாசி)

It should not be read...

 A newly awarded Ph.D. scholar attended a seminar where he had to present a research paper.  Not used to public speaking, he was very nervous and decided to read through his written communication.  However, he could not comprehend why people suddenly laughed in the middle of his presentation.  He came to know later that he had also spoken out the PTOs at the end of each page, while reading out. கொண்டையை மறைக்க மறந்துட்டேனே!

Doesn't Matter in Spinal Cord

 At his anatomy practical, a student was required to draw and label a cross section of the spinal cord. He labelled the "Grey Matter" first. Then labelled the " White Matter" . After labelling the "Grey Matter" and the "White Matter" he was not sure what the remaining part was. He finally labelled it as "Doesn't Matter"

தொல்காப்பியம் கூறும் பத்துப் பொருத்தங்கள்

                  தமிழின் முதல் இலக்கண நூலான தொல்காப்பியம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருமணப் பொருத்தம் பற்றித் தெளிவாகக் கூறியுள்ளது.  மணமகன் , மணமகள் இருவருக்கும் பார்க்க வேண்டிய பத்துப் பொருத்தங்கள். பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டோடு உருவு நிறுத்த காம வாயில் நிறையே அருளே உணர்வொடு திருவென முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே! 1. பிறப்பு      பெருமைக்குரிய குடும்பத்தில் பிறத்தல் .  தம் தகுதிக்கேற்ற பிறப்பு உடையவர்களுடன் திருமண உறவு கொள்ள வேண்டும். 2. குடிமை        பிறந்த குடிக்கு கெட்டபெயர் வராமல் காக்கும் ஒழுக்கம்           உடையவர்களா எனப் பார்க்க வேண்டும். 3. ஆண்மை முயற்சியோடு செயல்படும் ஊக்கமுடையவர்களா எனப் பார்க்க வேண்டும். 4. ஆண்டு               பெண்ணை விட ஆண் வயதில் கூட இருக்க வேண்டும். 5. உருவம்           ...

தொல்காப்பியம் - இருக்கக் கூடாத பத்துக் குணங்கள்

  மணமக்களுக்கு இருக்கக் கூடாத பத்துக் குணங்களாக தொல்காப்பியம் கூறுவன. நிம்புரி கொடுமை வியப்பொடு புறமொழி வன்சொல் பொச்சாப்பு மடிமையொடு குடிமை இன்புறல் ஏழைமை மறப்போடொப்புமை என்றிவை இன்மை என்மனார் புலவர் .   1. நிம்புரி   -      தற்பெருமை கூடாது 2. கொடுமை  -     தீமை செய்யும் மனப்பான்மை கூடாது 3. வியப்பு  -   ஒருவருக்கொருவர் இணையாகக் கருதாமல் தன்னை வியத்தல் கூடாது 4. புறமொழி   -   புறம்பேசக் கூடாது 5. வன்சொல்   -   தகாத சொற்கள் பேசக்கூடாது 6. பொச்சாப்பு   -   ஏனோ தானோ என தளர்ச்சியோடு இருக்கக் கூடாது 7. குடிமை     -     தன் குடும்பத்தை மட்டும் உயர்த்திப் பேசக்கூடாது 8. ஏழைமை   -   வருவாய்க்கு ஏற்ற வாழ்க்கை வாழ வேண்டும்.   வறுமைக்கு வருந்தக் கூடாது. 9. மறதி      -        மறதி கூடாது 10. ஒப்புமை  -   கணவனை மனைவியோ , மனைவியை கணவனோ பிறரோடு ஒப்பிட்டுப் பேசக் கூடாது.

She was not only

  A yokel joined an etiquette course to learn social graces.   He learnt some situation-based phrases. The instructor advised him to change the names according to the situation.   When a neighbour died, he went to console the family. As taught by the etiquette advisor, he commiserated,   “I am very sorry to learn of your mother’s death. She was not only your mother but was so good that the whole neighbourhood considered her their mother”   The teacher complemented him for being a good learner and he became proud of his social accomplishments.   Later the wife of a friend died. The man went to condole his friend.  Started ...   “I am very sorry to learn of your wife’s death.   ………… ”

தாத்தா பாட்டியிடம் நான் கற்றுக்கொண்ட நற்பண்புகள்

  M. Aryaa III – A                என் பாட்டியின் பெயர் பூங்கொடி. என் மேல் மிகவும் அன்பாகவும் பாசமாகவும் இருப்பார். எல்லாரிடமும் தன்மையாக பழகுவார். பாட்டியிடம் இருந்து   பாசத்தையும் அனைவரிடமும் அன்புகாட்ட வேண்டும் என்றும் நான் கற்றுக்கொண்டேன்.   தாத்தாவிடம் இருந்து எளிமையாகவும் நேர்மையாகவும் இருக்க தெரிந்து   கொண்டேன்.   வி. தன்வித் III – STD                               என் தாத்தா மிகவும் எளிமையானவர். என் பாட்டி சுறுசுறுப்பானவ ர்.  என் அப்புச்சி கலகலப்பானவர். என் அம்மாச்சி பொறுமையானவர். இவையே என் தாத்தா , பாட்டி ஆகியோரிடம் நான் கற்றுக் கொண்ட நல்ல பழக்கங்கள்.   S. Kiruthik III – A •              தாத்தா , பாட்டி அழகா எமுதச் சொன்னாங்க! •     ...

My favourite sweet

  கா.தரணிசாய்ராம் II – B       எனக்கு மிகவும் பிடித்த இனிப்பு பண்டம் ஆகும் “மைசூர் பாக்” ஏன் என்றால் மைசூர்பாகின் சுவை ,   நிறம் , வாசனை மற்றும் வடிவம் மிகவும் அருமையாக இருக்கும் ;;. என் பாட்டி “மைசூர் பாக்” தயார் செய்யும் நேரத்தில் அதன்   வாசனை என் மூக்கை துளைக்கும் ;.   M.S.Indhiraprasath II-B •      எனக்கு மிகவும் பிடித்த இனிப்பு பச்சைப்பயிறு லட்டு. •      அது மிகவும் சுவையாக இருக்கும். •      பச்சைப்பயிறு , நாட்டுச்சாக்கரை , முந்திரி , பாதம் , ஏலக்காய் , நெய் கலந்து செய்வதால்     உடலுக்கு சத்து மற்றும் ஆரோக்கியம் நிறைந்தது.   ம.லிபிகா II – B       எனக்கு மிகவும் பிடித்த இனிப்பு பண்டம் கேசரி. ஏனெனில் அது இனிப்பாகவும் முந்திரி , திராட்சை , நெய் போன்றவற்றுடன் கலந்து செய்வதால் மணம் நன்றாக இருக்கும்.   K.N.Mruthula    II-B        எனக்கு பிடித்த இனிப்பு பண்டம் “...