குழந்தைப் பருவத்தை அடுத்து பாலப் பருவம் வருகிறது.
குழந்தைப் பருவத்தின் மறைவு தான் பாலப்பருவம்.
அந்த பாலப்பருவம் மறைந்து காளைப்பருவம் வருகின்றது.
அதுவும் மறைந்து இளமைக்காலம் வந்தடைகின்றது.
அதுவும் நீடிக்காமல் செத்து முதுமைப்பருவம் சீக்கிரமே வந்துவிடுகின்றது.
இப்படி மனித வாழ்விலே நமக்குள்ளேயே பல சாவுகளை பல கட்டங்களில் சத்தித்த போதும் நாம் அழுவதில்லை.
ஆனால் பிறர் இறந்து விட்டால் உடனே அழுகின்றோமே இது
மடமைத்தனம் அல்லவா?
பாளையாம் தன்மை செத்தும்
பாலனாம் தன்மை
செத்தும்
காளையாம் தன்மை செத்தும்
காமுறும் இளமை
செத்தும்
மீளும்இவ் இயல்பும் இன்னே
மேல்வரு மூப்பும்
ஆகி
நாளும் நாள் சாகின்றாமால்
நமக்கு நாம்
அழாதது என்னோ!
(குண்டலகேசி)
Comments
Post a Comment
Your feedback