நவம்பர் 12: 1859
பாரிசில் ஒரு சர்க்கசில் முதன் முதலாக ஜீல்ஸ் லியோடார்ட் என்பவர் பறக்கும் ஊஞ்சலில் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைக்குத் தாவி மக்களை வியக்க வைத்தார்.
நவம்பர் 12: 1896
பறவைகள் ஆராய்ச்சியாளரான சலீம் அலி பிறந்த நாள்.
பறவைகளின் வாழ்க்கையைப் பற்றியும், பழக்க வழக்கங்கள் குறித்தும் இவர் வெளியிட்ட கட்டுரைகளும், நூல்களும் உலகப் புகழ் வாய்ந்தவை.
பறவைகளின் நல்வாழ்வும், பாதுகாப்பும், இயற்கைப் பாதுகாப்போடு பின்னிப் பிணைந்தவை என்ற அடிப்படை விஷயத்தை எப்போதும் வலியுறுத்திவந்தவர் இவர்.
Handbook of the Birds of India and Pakistan என்ற தொகுப்பும் ஒரு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி (The Fall of Sparrow) என்ற தன்வரலாற்று நூலும் சலிம் அலி எழுதிய முக்கிய நூல்களாகும்.
ஜூலை 27, 1987 இவர் மறைந்த நாள்.
நவம்பர் 12: 1920
எழுத்தாளர் வல்லிக்கண்ணன் பிறந்த நாள்.
நவம்பர் 12: 1946
காசி இந்து பல்கலைக் கழகத்தை உருவாக்கிய பண்டித மதன் மோகன் மாளவியா காலமானார்.
நவம்பர் 12: 1984
ராஜிவ் காந்தி காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Comments
Post a Comment
Your feedback