2 டிசம்பர் 1873:
நியூயார்க் டெய்லி டிராபிக் என்னும் பத்திரிகையில் முதன்முதலாக புகைப்படத்துடன் செய்தி வெளியானது
2 டிசம்பர் 1901:
கிங் காம்ப் கில்லட் என்பவர் ரேசர் பிளேடு தயாரிப்பதற்கான காப்புரிமம் பெற்றார் .
2 டிசம்பர் 1911:
நான்காம் தமிழ் சங்கம் நிறுவிய பாண்டித்துரைத் தேவர் காலமானார்.
தம்மை நாடி வந்த தமிழ்ப் புலவர்களுக்கெல்லாம் வாரி வழங்கியவர்.
தமிழின் மேன்மைக்கெனப் பெரும்பொருள் வழங்கி தனியொருவராய் நின்று நான்காம் தமிழ்ச்சசங்கம் ஏற்படுத்திய பெருமைக்குரிய இவரின் விரிவான பெயர் பாலவநத்தம் ஜமீன் வள்ளல் பாண்டித்துரை தேவர் என்பதாகும்.
இவர் காலத்தில் வாழ்ந்த அரைகுறை ஆங்கிலப்புலவர் ஸ்காட் பிழையுடன் எழுதி வெளியிட்ட திருக்குறள் புத்தகத்தின் அனைத்துப் பிரதிகளையும் விலைகொடுத்து வாங்கி அவற்றை குழியில் போட்டு எரித்தவர் தேவர்.
பிறர் கையில் பிழையான புத்தகங்கள் கிடைக்கக்கூடாது என்பதே அதற்குக் காரணம்.
'கப்பலோட்டிய தமிழர்' வ.உ.சி.,யின் சுதேசிக் கப்பல் ஓட்டும் பெரும் பணிக்குத் தனியொருவராகவே ஒன்றரை லட்சம் பணத்தை அள்ளி வழங்கியவர் இவர்.
2 டிசம்பர் 1933:
பழம்பெரும் நடிகர் எஸ் . ஜி. கிட்டப்பா மறைந்த தினம்.
பல நாடக நடிகர்கள் திரைப்படத்தில் நடித்துத் தான் புகழ் பெற்ற நடிகர்களாகியிருக்கிறார்கள். ஆனால் நாடக நடிகராக புகழின் உச்சியில் இருக்கும் போது திரைப்படத்தில் நடிக்கத். தொடங்கியவர் இவர்.
பிரபல நடிகையும் பாடகியுமான கே. பி. சுந்தராம்பாளின் கணவர் இவர்.
2 டிசம்பர் 1965:
இந்தியாவில் எல்லைப் பாதுகாப்புப் படை அமைக்கப்பட்டது.
2 டிசம்பர் 1988 :
பெனாசிர் பூட்டோ பாகிஸ்தானின் பிரதம மந்திரியாகப் பதவியேற்றார். ஒரு இஸ்லாமிய நாட்டின் முதல் பெண் பிரதமர் இவரே.


Comments
Post a Comment
Your feedback