நவம்பர் 15: 1673
உடலிலுள்ள சுரப்பிகளைப் பற்றிக் கூறியவரும் தைராய்டு சுரப்பிக்கு ‘கவசம்’ என்னும் பொருள்படும் கிரேக்கச் சொல்லான ‘தைரோஸ்’ என்பதை மூலமாகக் கொண்டு ‘தைராய்டு’என்னும் பெயரைச் சூட்டியவருமான பிரிட்டிஷ் மருத்துவயியலாளர் தாமஸ் வார்ட்டன் லண்டனில் காலமானார்.
நவம்பர் 15: 1896
‘தி போனோஸ்கோப்’ என்னும் முதல் சினிமா பத்திரிகை நியூயார்க்கிலிருந்து வெளிவரத் தொடங்கியது.
நவம்பர் 15: 1913
இலக்கியத்திற்கான நோபல் பரிசு ரவீந்திரநாத் தாகூருக்கு வழங்கப்படுவதாக இன்று கல்கத்தாவிற்குச் செய்தி எட்டியது. அவருடைய ‘கீதாஞ்சலி’ என்ற நூலுக்காக இப்பரிசு கிட்டியது. ஆசியாவிலேயே முதன் முதலாக நோபல் பரிசைப் பெற்றவர் இவர்தான்.
நவம்பர் 15: 1917
சமூகவியலின் தந்தை என்று போற்றப்படும் பிரெஞ்ச் சமூகவியலாளர் எமிலி டர்க்ஹெயாம் பாரிஸ் நகரில் காலமானார்.
நவம்பர் 15: 1920
பாரதியார் சுதேசமித்திரன் பத்திரிகையின் துணை ஆசிரியரானார்.
நவம்பர் 15: 1921
குணச்சித்திர நடிகர் பூர்ணம் விஸ்வநாதன் பிறந்த நாள்.
நவம்பர் 15: 1930
பிரிட்டிஷ் தொலைக்காட்சியில் முதன் முதலில் வண்ண விளம்பரம் ஒளிபரப்பப்பட்டது.
நவம்பர் 15: 1982
ஆச்சார்யா வினோபா பாவே மறைந்த நாள்.
நவம்பர் 15: 1989
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கராச்சியில் நடந்த கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் முதன் முதலாக ஆடினார். அப்போது அவருக்கு வயது 16 ஆண்டு 6 மாதம் 25 நாள்.


Comments
Post a Comment
Your feedback