நவம்பர் 14: 1957
ஜவஹர்லால்
நேருவின் பிறந்த நாளை ‘குழந்தைகள் தினமாக’
கடைப்பிடிக்க வேண்டுமென்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.
நவம்பர் 14 :1964
இந்தியாவில் முதன் முதலாக நினைவு நாணயம் வெளியிடப்பட்டது. நேருவின் நினைவாக வெளியான இந்த நாணயத்தில் அவரது தலை உருவம் பொறிக்கப்பட்டது.
நவம்பர் 14 :1977
பக்தி வேதாந்த சுவாமி பிரபுபாதா மறைந்த தினம்.
இஸ்கான் (ISKCON) எனப்படும் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தை நிறுவியவர் ஆவார். உலகெங்கும் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா என்கின்ற பக்தி முழக்கமும் தியானமும் பரவ இவர் தான் முக்கியமான காரணம். உலகிலேயே பக்திநூல்களை யாரும் நினைத்துப் பார்க்க முடியாத குறைந்த விலையில் தருவது இந்த இயக்கம் தான்.
நவம்பர் 14: 1985
டில்லியில் தொலைக்காட்சி ‘டெலி டெக்ஸ்ட் சர்வீஸ்’ தொடங்கப்பட்டது.
நவம்பர் 14: 1989
நேருவின் 100 ஆவது பிறந்த தின விழாவில் இந்திய விளையாட்டுத்துறை ‘பாரதியம்’ என்னும் ஒரு நிகழ்ச்சியை நேரு விளையாட்டரங்கில் நடத்தியது. 50000 சிறுவர் சிறுமிகள் ஒரே நேரத்தில் ஒருவரின் கட்டளைப்படி உடற்பயிற்சிகள் செய்து காட்டினர்.

Comments
Post a Comment
Your feedback